வருமான வரி விகிதத்தை தேர்வு செய்யும் வழிவருமான வரி விகிதத்தை தேர்வு செய்யும் வழி ...  வருகிறது இணைய வரி விதிப்பு! வருகிறது இணைய வரி விதிப்பு! ...
புதிய வரு­மான வரி விகி­தம் யாருக்கு பலன் அளிக்­கும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2020
00:01

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, குறைந்த வரி விகிதம் கொண்ட புதிய வருமான வரி முறையில் உள்ள சாதகம், பாதகம் பற்றி ஒரு பார்வை:

ஒவ்வோர் ஆண்­டும் பட்­ஜெட் தாக்­கல் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன், வரு­மான வரி சலுகை அறி­விக்­கப்­படும் எனும் எதிர்­பார்ப்பு நடுத்­தர மக்­கள் மத்­தி­யில் இருக்­கும். இந்த எதிர்­பார்ப்பு அண்­மை­யில் தாக்­கல் செய்­யப்­பட்ட, 2020 பட்­ஜெட்­டில் நிறை­வே­றி­யுள்­ளது. குறைந்த வரி செலுத்­தக்­கூ­டிய வரு­மான வரி விகி­தம், பட்­ஜெட்­டில் அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­படி, 2.50 லட்­சம் ரூபாய் வரை வரி கிடை­யாது.


ஐந்து லட்­சம் ரூபாய் வரை, 5 சத­வீ­தம்; 7.5 லட்­சம் வரை, 10 சத­வீதம்; 10 லட்­சம் வரை,
15 சத­வீ­தம்; 12.50 லட்­சம் வரை, 20 சத­வீ­தம்; 15 லட்­சம் வரை 25 சத­வீ­தம்; 15 லட்­சத்­திற்கு மேல், 30 சத­வீ­தம் என வரி விகி­தம் அமைந்­துள்­ளது.


புதிய முறை


இந்த புதிய முறை­யின்படி, பல­ரும் செலுத்த வேண்­டிய வரி குறை­யும் என்­றா­லும், இது விருப்­பத்­தேர்­வுக்கு உரி­யது என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், இந்த குறைந்த வரி
விகி­தத்தை தேர்வு செய்­தால், வழக்­க­மாக பொருந்­தக்­கூ­டிய விலக்­கு­களில் பல பொருந்­தாது
என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


வழக்­க­மான கழி­வு­கள், வரி சேமிப்பு முத­லீ­டு­கள் மூலம், வரி செலுத்­தக்­கூ­டிய வரு­மா­னத்தை
குறைக்­க­லாம். வரு­மான வரிச்­ சட்டம், 80 சி பிரி­வின் கீழ் மட்­டும், 1.50 லட்­சம் விலக்கு
பெற­லாம். என்.பி.எஸ்., முத­லீடு மூலம் கூடு­த­லாக, 50 ஆயி­ரம் விலக்கு பெற­லாம்.
புதிய வரு­மான வரி விகித முறையை தேர்வு செய்­தால், வழக்­க­மான விலக்­கு­க­ளின் பலனை பெற முடி­யாது என்­ப­தால், பல­ரும் குழம்­பும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஒரு சில­ருக்கு புதிய முறை வரியை குறைக்க உத­வும்.


ஆனால், ஒரு சில­ருக்கு, வழக்­க­மான விலக்­கு­களை விட்­டுக்­கொ­டுக்க வேண்­டும் என்­ப­தால், பாதிப்பு ஏற்­ப­ட­லாம். பொது­வாக, குறைந்த வரு­மா­னம் மற்­றும் குறைந்த முத­லீடு
கொண்­ட­வர்­க­ளுக்கு, புதிய முறை பலன் அளிக்­கும் என்று, வரி வல்­லு­னர்­கள் கூறு­கின்­ற­னர்.
மேலும், தற்­போ­தைய முறை­யில் விலக்­கு­கள் பெறா­மல், வரி செலுத்­து­ப­வர்­க­ளுக்­கும், இந்த முறை ஏற்­ற­தாக இருக்­கும். உதா­ர­ண­மாக, 12 லட்­சத்­திற்­கும் குறை­வான மொத்த வரு­மா­னம் கொண்­ட­வர்­கள், 1.91 லட்­சத்­திற்­கும் குறை­வான முத­லீ­டு­கள் கொண்­டி­ருந்­தால், புதிய முறை பலன் அளிக்­கும்.


மேலும், புதிய முறை­யில் கழி­வு­கள், விலக்­கு­கள் குறைவு என்­ப­தால் வரித்­தாக்­கல்
செலுத்­து­வ­தும் அதிக சிக்­கல் இல்­லா­த­தாக அமை­யும். ஆனால், ஏற்­க­னவே வரி சேமிப்பு
முத­லீ­டு­களை மேற்­கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு புதிய முறை பாத­க­மாக அமை­ய­லாம்.


கால்குலேட்டர்


அவர்­கள், குறைந்த வரி விகி­தம் கொண்ட புதிய முறைக்கு மாறி­னா­லும், விலக்­கு­க­ளின் பலனை பெற முடி­யாது என்­ப­தால், அதிக வரி செலுத்­தும் நிலை வர­லாம். தற்­போ­தைய முறை­யில், 2 லட்­சம், வரை விலக்கு கோரி, கணி­ச­மான பலன் பெற­லாம்.எனவே, இரண்டு முறை­களில் எது பலன் அளிக்­கும் என ஆராய்ந்து, அதற்­கேற்ப முடிவு செய்ய வேண்­டும். இதற்­கான இ-கால்­கு­லேட்­டர் வச­தியை வரு­மா­ன­ வ­ரித் ­துறை அறி­மு­கம் செய்­துள்­ளது.


புதிய முறையை தேர்வு செய்­தா­லும், அடுத்த ஆண்டு பழைய முறைக்கு மாறிக் ­கொள்­ள­லாம். ஆனால், இந்த வசதி, வர்த்­தக வரு­மா­னம் இல்­லா­த­வர்­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)