‘திடக்கழிவு மேலாண்மைக்கு  5 சதவீத நிலம் ஒதுக்க வேண்டும்’‘திடக்கழிவு மேலாண்மைக்கு 5 சதவீத நிலம் ஒதுக்க வேண்டும்’ ...  ‘டிவி’ இறக்குமதிக்கு கட்டுப்பாடு மத்திய அரசு ஆலோசனை ‘டிவி’ இறக்குமதிக்கு கட்டுப்பாடு மத்திய அரசு ஆலோசனை ...
நிலையான வைப்பு - பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2020
18:55

பெர்க்ஷைர்ஹாத்வேயின் நிறுவனர் வாரன்பஃபெட் ஒருமுறை கூறினார், 'ஒருபோதும் ஒற்றை வருமானத்தை மட்டுமே நம்பி இருக்காதீர்கள். இரண்டாவது வருவாய் ஆதாரத்தை உருவாக்குவதற்காக முதலீடு செய்யுங்கள்.' பணவீக்கம் தினசரி வாழ்வை பாதிக்கின்ற விதத்தைப் பார்க்கும்போது; மக்களுக்கு வேறு வழியில்லை, இந்த ஆலோசனை மீது மேலும் மேலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். முதலீடுகள் நாளடைவில் செல்வத்தைப் பெருக்குவதற்காக மட்டுமல்லாமல், அவசர காலங்களின் போது தேவைப்படும் ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்குகின்றன.

இருப்பினும், தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு முதலீடு செய்வது என்பது ஒரு கடினமான வேலையாக மாறக்கூடும். பல்வேறு பலன்களையும், அதேபோன்று இடர்களையும் வழங்கக்கூடிய பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை சந்தை கொண்டிருக்கிறது. அது போன்ற ஒரு சூழ்நிலையில், பணத்தை முதலீடு செய்வதற்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான வழியாக நிலையான வைப்பு (எஃப்.டி) இருக்கிறது. இது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் டெபாசிட் செய்து, உங்கள் டெபாசிட் திட்டத்தின் வகையைப் பொறுத்து இறுதியில், அல்லது குறிப்பிட்டகால இடைவெளியில் அதிக வருமானத்தைப் பெறுகின்றவாறு, உங்கள் பணத்தைப் முதலீடு செய்வதற்கான பழமையான, மற்றும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றாகும்.

சந்தையில் பல இலாபகரமான சேமிப்பு முறைகள் உள்ளன என்பது உண்மை தான். அவற்றில் சில மிக-அதிகமான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன, ஆனால் அவை ஆபத்தானவையாக இருக்கக்கூடும். சில பாதுகாப்பானவையாக இருக்கின்றன. ஆனால் நெகிழ்வற்றவையாக உள்ளன. இவை எல்லாவற்றையும் விட எஃப்.டி உயர்ந்ததாக இருக்கிறது.

முதலீடு என வரும்போது ஒருவர் ஏன்எப்.டி-யை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான காரணங்களில் சில இங்கே:

• மற்றதைப் போலவும் அல்லாத பாதுகாப்பு பணம் என்று வரும்போது, சிறப்பான மற்றும் பாதுகாப்பான வருமானத்தை உறுதி செய்கின்ற ஒரு தேர்வைமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிக பாதுகாப்பு, மற்றும் குறைந்தபட்ச அபாயத்தைக் கொண்டிருப்பதை, எப்.டி உறுதி செய்கிறது. கிரிஸில் என்பது ஒரு நிறுவனத்தின் செயல் திறனை மதிப்பீடு செய்து, அவற்றுக்கு மதிப்பீட்டு நிர்ணயங்களை வழங்கும் ஒரு நிறுவனமாகும். பி.என்.பிஹவுஸிங் -இன்எப்.டி, அதிக அளவு பாதுகாப்பை சுட்டிக்காட்டுகின்ற வகையில், கிரிஸில் மூலம் எஃப்.ஏ.ஏ.ஏ/நெகட்டிவ் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சந்தையின் போக்கு, மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப வருமானங்கள் மாறக்கூடிய பிற முதலீட்டு முறைகளைப்போல் இல்லாமல், எஃப்.டி ஒரு மதில் சுவர் போல பாதுகாப்பாக நிற்கிறது.

• அதிக வட்டி விகிதங்கள்:
அனைத்து வகையான முதலீட்டுத் தேர்வுகளிலும் வட்டி விகிதங்கள் வேறுபடுகின்றன; அவை பரஸ்பர நிதிகள், பங்குகள் அல்லது எப்.டி-க்கள் எதுவாயினும். இருந்தாலும், எப்.டி-க்கள் மிகவும் நம்பகமானவை. உதாரணத்திற்கு, பரஸ்பர நிதிகள் போன்ற முதலீடுகளில், சந்தையின் நிலைக்கேற்ப வருமானத்தில் இறக்கங்கள், மற்றும் வட்டியில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. எப்.டி-யில் இந்தநிலை கிடையாது. வட்டி விகிதங்கள் முன்னரே - தீர்மானிக்கப்பட்டவையாக உள்ளன. அதனால் முதலீட்டின் மீதான வருமானத்தை அவை பாதிக்காது. அதுமட்டுமல்லாமல், மூத்த குடிமக்களுக்கு, பி.என்.பிஹவுசிங் வழங்கும் எஃப்.டி.களில் 0.25% கூடுதல் வட்டிவிகிதம் உள்ளது; அதனால், சிறந்த வருமானத்துடன் அதிக வட்டிவிகிதங்களை வழங்குகிறது.

• நியமானதாரர் தேர்வு
பாதுகாப்பைப் பற்றி பேசுகின்ற வேளையில், நிலையான வைப்புகளின் நியமனதாரர் வசதியைக் கவனிக்க வேண்டியது முக்கியமானதாகும். இது, எப்.டி- யில் முதலீடு செய்யும் நேரத்தில் ஒரு நியமானதாரரைத் தேர்ந்தெடுக்கும் வசதியை முதலீட்டாளருக்கு அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக முதலீட்டாளரின் மறைவு ஏற்படும்பட்சத்தில், அந்த நியமானதாரரிடம் முதலீடுகளின் பலன்கள் வழங்கப்படுகின்றன, அதன்மூலம், பலன்கள் வீணாகிப் போகாது என்பது உறுதி செய்யப்படுகிறது. அதிக நம்பகத்தன்மையையும், பாதுகாப்பையும் வழங்கும் வகையில், தேசிய வீட்டுவசதி வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, இந்த வசதி வழங்கப்படுகிறது.

• அவசரகாலத்தில் உதவும்கரம்:
ஒருவர் எதிர்பார்க்காத நேரத்திலேயே அவசர நிலை ஏற்படுகிறது. அது போன்ற மோசமான சூழ்நிலையில், ஒரு எப்.டி சிறந்த ஆபத்பாந்தவனாக மாறலாம். அதன் அற்புதமான அம்சங்களுக்கு நன்றி, வாடிக்கையாளர்கள் முதிர்வு காலத்துக்கு முன்பே, திரும்பப் பெறுகின்ற வசதி உள்ளது. பி.என்.பிஹவுஸிங்கின் எப்.டி-யில், மூன்று மாதகாலத்துக்குப் பிறகு, எந்தநேரத்திலும் வாடிக்கையாளர்கள் வைப்புத் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், டெபாஸிட் தேதிக்குப் பிறகு மூன்று முதல் ஆறு மாதத்துக்குள் திரும்பப் பெறும் பட்சத்தில், வருடத்துக்கு 4% என்ற வட்டி விகிதத்தை முதலீட்டாளர்கள் பெறுவார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்பப்பெற்றால், அந்த காலகட்டத்துக்குரிய முன்னரே - தீர்மானிக்கப்பட்டதில் இருந்து வெறும் 1% மட்டுமே குறைவான வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். கூடுதலாக, மொத்த வைப்புத் தொகையில் 75% வரையில், நிலையான வைப்புகள் மீது கடன் பெறும் வசதியையும், வாடிக்கையாளர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

• ஒரே கிளிக்கில் அனைத்தும்:
தொழில்நுட்பத்துக்கு நன்றி, ஒரு முதலீட்டைத் தொடங்குவதற்கு மக்கள் நிறுவனத்துக்கு செல்லவேண்டிய அவசியம் கூட இல்லை. அவர்கள் விவரங்களை மட்டுமே நிரப்பி, மற்ற நடைமுறைகளுக்கு நிறுவனமே அவர்களைத் தொடர்பு கொள்கின்ற இணையவழி ஆதரவை பி.என்.பிஹவுஸிங் வழங்குகிறது. பணத்தை டெபாஸிட் செய்வதற்குக்கூட வாடிக்கையாளர்கள் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. இணையவழி வங்கி சேவை / காசோலை மூலமாக எப்.டி பணம் செலுத்தல்களை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கூடுதலாக, இது போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டுள்ளன. அதன்மூலம், விசாரிப்புகளைத் தீர்ப்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை போர்ட்டலை வழங்குகிறது. சந்தோஷமான மற்றும் நிதி சார்ந்த பாதுகாப்பான வருங்காலத்தை உறுதி செய்ய, சரியான அடியை உடனே எடுத்து வைப்பது நல்லது.

எஃப்.டி. செயல்முறையை பற்றிய மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து இங்கே அழுத்தவும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)