பதிவு செய்த நாள்
15 பிப்2020
23:38

புதுடில்லி:ரிசர்வ்
வங்கி, வட்டி விகிதத்தை கணிசமாக குறைத்த போதும், அதற்கேற்ப
வங்கிகள், அவை வழங்கும் கடனுக்கான வட்டியை அதிகம் குறைக்கவில்லை.
இந்
நிலையில், வட்டி விகிதத்தை குறைத்ததன் பலன், வரும் நாட்களில்
தெரிய வரும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்
தெரிவித்துஉள்ளார்.ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பின், அவர் இவ்வாறு கூறினார்.
கடன் வளர்ச்சி
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக்
கடனுக்கான, ரெப்போ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி குறைத்ததன் பலன், வரும் நாட்களில் அதிகரிக்கும்; மேலும், வரவிருக்கும் மாதங்களில், கடன் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.பொருளாதார
நிலையில், வளர்ச்சிக்கான ஒரு சில குறியீடுகள் தெரியத் துவங்கி
உள்ளன. பொருளாதார நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக, ரிசர்வ்
வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம், வட்டி விகிதத்தில் எந்த
மாற்றத்தையும் செய்யவில்லை.
சில்லரை விலை பணவீக்கம்
மட்டுமின்றி, அடிப்படை பணவீக்கத்தையும் நிதிக் கொள்கை
கட்டமைப்பில் சேர்ப்பது குறித்து, நாங்கள் உள்ளுக்குள் ஆலோசித்து வருகிறோம்.மேலும்,
கடந்த மூன்றரை ஆண்டுகளில், நிதிக் கொள்கை குழு முடிவுகளுக்கான
கட்டமைப்புகள்
எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதையும் ஆராய்ந்து
வருகிறோம். தேவைப்பட்டால்,
அரசுடன் இது குறித்து தகுந்த நேரத்தில்
பேச்சு நடத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
வட்டி விகிதம்
கடந்த,
6ம் தேதியன்று, ஆறு உறுப்பினர்கள் கொண்ட நிதிக் கொள்கை குழு
கூட்டத்தின்
முடிவில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும்
செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம், 5.15
சதவீதம் என்ற நிலையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதே
போல், கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு
கூட்டத்திலும், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும்
செய்யப்படவில்லை.
டிசம்பருக்கு முன், தொடர்ந்து ஐந்து முறை, வட்டி
விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து
அறிவித்து வந்தது
குறிப்பிடத்தக்கது. வட்டி விகிதம் ஐந்து முறையும் சேர்த்து,
மொத்தம்,
1.35 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது. கடந்த இரண்டு
கூட்டங்களில் தான் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|