உடைகள் வாடகைக்கு... இப்படியும் ஒரு 'ஸ்டார்ட்அப்' வந்திருக்கு!-உடைகள் வாடகைக்கு... இப்படியும் ஒரு 'ஸ்டார்ட்அப்' வந்திருக்கு!- ...  பெரு நிறுவனங்களும் உணர வேண்டும்! பெரு நிறுவனங்களும் உணர வேண்டும்! ...
ஒரு சிட்டிகை கூடுதல் கவுரவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
04:57

வருமான வரி செலுத்துவோர் தொடர்பாக, பிரதமர் மோடி தெரிவித்த ஒரு புள்ளிவிபரம், பலத்த சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

அதையும் தாண்டி, நம்மை யோசிக்க வைக்க, அவரது பேச்சு துாண்டுகோலாகவும் அமைந்துள்ளது.‘இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரில், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோரும் அடங்குவர். அவர்கள், தத்தமது துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.‘ஆனால், அவர்களில், 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் காண்பித்து, வருமான வரி செலுத்துவோர், 2,200 பேர் தான். ‘அப்படியானால், உயர்தரமான கார்களை வைத்திருப்போர், வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வோர், வெளிநாடுகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்போர் ஆகியோரை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்வது?’ என்று பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.உடனே, ‘டுவிட்டர்’ வாழ் பெருங்குடியினர், அவர் தெரிவித்த தகவல் தவறானது என்று வெகுண்டெழுந்தனர். எண்ணிக்கைஇந்தியாவில் 1 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய் காண்பிப்போர் எண்ணிக்கை, 97 ஆயிரத்து, 689 என்று அவர்கள், வருமான வரித்துறையின் வலைதளத்தில் இருந்து தகவல்களைச் சுட்டிக்காட்டி, சிலம்பம் ஆடத் துவங்கினர்.

அப்புறம், வருமான வரித்துறையே பிரதமர் பேச்சுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, முழுத் தகவல்களையும், டுவிட்டரில் வெளியிட்டது. அதன்படி, 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் காட்டி, வரி கட்டுவோர் எண்ணிக்கை, 8,600 என்று தெரிவித்தது. இதில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்ற புரொபஷனல்கள், 2,200 தான் என்பதை வருமான வரித்துறை உறுதி செய்தது.

நேர்மையானவர்கள்புள்ளிவிபரத்தை வருமான வரித் துறை வெளியிட்டதில் வேறொரு விஷயம் பற்றிக்கொண்டது. அதாவது, 130 கோடி பேரில், 1.46 கோடி தனிநபர்கள் தான் வருமான வரி கட்டுகின்றனர். அதிலும், 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் காண்பிப்பவர்கள், 1 கோடி பேர், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் காட்டுவோர், 46 லட்சம். இதிலும், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் காட்டுவோர், 3.16 லட்சம் பேர் தான்.அதாவது, நேர்மையாக வரிகட்டும், ‘மிடில்கிளாஸ்’ அப்பர் மிடில் கிளாஸ் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இவர்கள். இதிலும் ஒரு பிரிவினை உண்டு. வரி செலுத்தும் மாதச் சம்பளக்காரர்கள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம், சுயதொழில் செய்யும், மாதச் சம்பளம் பெறாதவர்களும் இதில் இருக்கின்றனர்.இந்த, 2018- – 19 பட்ஜெட்டில், நிதியமைச்சர், இவர்கள் கட்டும் வரியின் அளவை விவரித்தார். மாதச் சம்பளம் பெறாத வரிகட்டுபவர் ஆண்டொன்றுக்கு, 25 ஆயிரத்து, 753 ரூபாய் வருமான வரி செலுத்த, மாதச் சம்பளக்காரரோ, இவரைப் போன்று மும்மடங்கு, அதாவது, 76 ஆயிரத்து, 306 ரூபாய் வருமான வரி செலுத்துகிறார்.

நம்ம ஊர் விசித்திரங்களில் இதுவும் ஒன்று.பர்ஸ் காலிஆனால், நேர்மையாக வரிகட்டும் இந்த மனிதருக்கு என்ன கைம்மாறு கிடைக்கிறது? அரசாங்கப் பள்ளிகளோ, கல்லுாரிகளோ எண்ணிக்கையிலும் உயர்வதில்லை; தரத்திலும் மேம்படுவதில்லை. சுகாதாரச் சேவைகளின் தரம் மெச்சிக்கொள்வது போல் இல்லை. தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகளை நாடிப் போகும் நிலைமை தான் பெருகியுள்ளது. குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம்; நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த சுங்கவரி கட்டுகிறோம். இதற்கு மேல், மறைமுக வரிகள் வேறு, கண்ணுக்குத் தெரியாமல் பர்ஸைக் காலி செய்கின்றன.

ஆனால், விவசாயிகள், புரொபஷனல்கள் நிலை என்ன? 2012 கணக்கின்படி, இந்தியாவில் எட்டு லட்சம் பேர், தங்களை விவசாயிகள் என்று அறிவித்து, கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டு, வரி கட்டாமல் உள்ளனர். விசித்திரம்புரொபஷனல்களும் சேவை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். இதுவும் இந்தியாவின் இன்னொரு விசித்திரம்.

இந்த நிலையைத் தான் பிரதமர் மோடி, மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருபக்கம் வரிச் சலுகையை அனுபவிக்கும் பணக்காரர்கள், இன்னொரு பக்கம், தலையெழுத்தே என்று வரிகளைச் செலுத்திவிட்டுத் திண்டாடும் மத்தியமர்கள். மத்தியமர்கள் தான் கசக்கிப் பிழியப்படுகின்றனர்.இந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020 பட்ஜெட் உரையில், வரி செலுத்துவோருக்கான உரிமைகளையும், நியாயங்களையும் முன்னிறுத்தும், ‘வரி செலுத்துவோர் சாசனம்’ எனப்படும், டேக்ஸ்பேயர் சார்ட்டரை அறிமுகம் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.உலகின் பல வளர்ந்த நாடுகளில், இத்தகைய சார்ட்டர் நடைமுறையில் உள்ளது. வரி செலுத்துவோரை மரியாதையாக நடத்துவது, அவர்களுடைய தனியுரிமையை மதிப்பது, ரகசியம் காப்பது ஆகியவை முக்கியமானவை.

நிர்ணயம்

அமெரிக்காவில், அவர்களுடைய உரிமைகள் என்னென்ன என்பது வெளிப்படையாகவே பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் அறிமுகமாகப் போகும் சார்ட்டர், வெற்று முழக்கங்களாக இருக்கக்கூடாது. அதில் தெளிவான நெறிமுறைகள் வேண்டும். வரி செலுத்துவோர் பெறக்கூடிய அரசாங்கப் பயன்கள் என்னென்ன என்பதையும் தெரிவிக்கவேண்டும். எல்லா சேவைகளுக்கும் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.வரி செலுத்துவது நம் கடமை தான். அதேசமயம், அதற்கான ஒரு சிட்டிகை கூடுதல் கவுரவத்தையும், மரியாதையையும் அரசாங்க சேவைகளில் எதிர்பார்ப்பதில் தவறில்லையே!ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்pattamvenkatesh@gmail.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)