பெரு நிறுவனங்களும் உணர வேண்டும்! பெரு நிறுவனங்களும் உணர வேண்டும்! ...  பொது காப்பீடு நிறுவனங்களின் பிரீமிய வருவாய் அதிகரிப்பு பொது காப்பீடு நிறுவனங்களின் பிரீமிய வருவாய் அதிகரிப்பு ...
இந்தியாவின் ஜி.டி.பி., கணிப்பை குறைத்தது, ‘மூடிஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
02:51

புதுடில்லி: நடப்பு ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, 5.4 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது, ‘மூடிஸ்’ நிறுவனம்.‘மூடிஸ் இன்வெஸ்ட்டர்ஸ் சர்வீஸ்’ நிறுவனம், இந்தியாவின், ஜி.டி.பி., எனும், நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, 5.4 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.

இதற்கு முன், இந்நிறுவனத்தின் கணிப்பு, 6.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, மூடிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவின் பொருளாதாரம், கடந்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும், நடப்பு காலாண்டிலிருந்து வளர்ச்சி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, எந்த ஒரு மீட்சியும், இதற்கு முன் நாங்கள் எதிர்பார்த்திருந்ததை விட மெதுவாகவே இருக்கும்.

இதன்படி, 2020ம் ஆண்டுக்கான எங்கள் வளர்ச்சிக் கணிப்பு, 5.4 சதவீதமாக இருக்கும். இதற்கு முன், 6.6 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தோம். மேலும், 2021ம் ஆண்டில் வளர்ச்சி, 6.7 சதவீதமாக கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது, 5.8 சதவீதமாக இருக்கும் என கருதுகிறோம்.வளர்ச்சிக் கணிப்புகள், ஜனவரி முதல், டிசம்பர் வரையிலான காலண்டர் ஆண்டை அடிப்படையாகக் கொண்டவை. அதன் மதிப்பீடுகளின்படி, 2019ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5 சதவீதமாக உள்ளது.பலவீனமான பொருளாதாரம், கடன் வளர்ச்சி குறைவு ஆகியவை, ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதாக இருக்கிறது.


இதனால், விரைவான மாற்றத்தை காண்பது கடினமாகிறது.மேலும், 2020ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகள், தேவைகளை அதிகரிக்கும் வகையில் அமையவில்லை. வரிக் குறைப்புகளை அறிவித்திருந்தாலும், பிற நாடுகளில் இதே போன்ற கொள்கையை மேற்கொண்டபோது, அதனால் நுகர்வு மற்றும் வணிக செலவுகள் அதிகரிக்கவில்லை.இந்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை இன்னும் தளர்த்த வேண்டும் என, மூடிஸ் எதிர்பார்க்கிறது. இருப்பினும், சமீபத்தில் உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பால், சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது.இது, அடுத்த கட்ட பாதிப்பை ஏற்படுத்தினால், வட்டி விகிதங்களை குறைப்பது, ரிசர்வ் வங்கிக்கு சவாலாக இருக்கும்.இவ்வாறு, மூடிஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் வளர்ச்சி

உலகளவிலான பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை குறைத்துவிட்டது.‘ஜி – 20’ நாடுகளின், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2.4 சதவீதமாக இந்த ஆண்டில் இருக்கும். அடுத்த ஆண்டில் இது, 2.8 சதவீதமாக அதிகரிக்கும். சீனாவைப் பொறுத்தவரை, 2020ம் ஆண்டில், அந்நாட்டின் வளர்ச்சியை, 5.2 சதவீதமாக குறைத்து கணித்துள்ளோம். அடுத்த ஆண்டில், 5.7 சதவீதமாக இருக்கும் என்ற முந்தைய கணிப்பில் எந்த மாற்றமுமில்லை என, மூடிஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)