அருங்காட்சியகம் மூலம்   எல்., அண்டு டி., வரலாறு அருங்காட்சியகம் மூலம் எல்., அண்டு டி., வரலாறு ...  ஜனவரியிலும் வாகன விற்பனை சரிவு; தப்பியது மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே ஜனவரியிலும் வாகன விற்பனை சரிவு; தப்பியது மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே ...
ஜி.எஸ்.டி.,யை அதிகரிக்க கூடாது: மாநில முதல்வர்களுக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
02:46

புதுடில்லி : மொபைல் போன் மீதான, ஜி.எஸ்.டி.,யை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என, முக்கியமான அனைத்து மாநிலங்களிடமும், இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கமான, ஐ.சி.இ.ஏ., கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து, இச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: மொபைல் போன்கள் மீதான, ஜி.எஸ்.டி.,யை தற்போதைய, 12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக அதிகரிக்க வேண்டாம் என, மத்திய நிதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மேலும், வரி அதிகரிப்புக்கு ஆதரவு தர வேண்டாம் என, அனைத்து பெரிய மாநில அரசுகளின் முதல்வர்களுக்கும், எழுத்து மூலம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜி.எஸ்.டி., அதிகரித்தால் அது, ‘டிஜிட்டல் இந்தியா’ நோக்கத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். மேலும், பல்வேறு சேவைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும், மொபைல் போன் சந்தையின் தேவை அதிகரித்து வருகிறது. இது, 2013 – 14ல், 57 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, 2018 – 19ல், 1.8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 315 சதவீத வளர்ச்சியாகும்.

இந்நிலையில், மொபைல் போன் மீதான வரியை அதிகரிப்பது, வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறைக்கு அபராதம் விதிப்பது போலாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வாஷிங்­டன் : கொரோனா வைரஸ் தொற்று நோயால், உலக மக்­கள் கடு­மை­யான பாதிப்பை சந்­தித்­து­ வ­ரு­கி­றார்­கள். ... மேலும்
business news
புது­டில்லி : இந்­திய விமான நிறு­வ­னங்­கள் திவா­லா­கி­வி­டும் ஆபத்­தில் உள்­ள­தாக, சர்­வ­தேச விமான ... மேலும்
business news
மும்பை : நாட்டின் அன்னிய செலவாணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின், இரண்டாவது வாரமாக சரிவைக் ... மேலும்
business news
மும்பை : தொடர்ந்து மூன்று நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் துவக்கத்தில் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 21,2020
ஐ.டி.சி., நிறுவனம், ‘கொரோனா’வால் பாதிக்கப்படும் ஏழைகளுக்காக, 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
VARADHARAJANAYATHURA - Salem,India
21-பிப்-202012:16:10 IST Report Abuse
VARADHARAJANAYATHURA உழைக்கவேண்டும், உற்பத்தி செய்யவேண்டும், பொருட்களை வாங்கி நுகரவேண்டும் என்றால் இந்த நாட்டில் எந்த எந்த ஸ்டேஜ் செக் பாயின்ட்களில் எவ்வளவு வரியை அப்பாவி இந்தியன் செலுத்துகிறான்? இத்தகைய வரி விதிப்புகளால் உற்பத்தியான பொருளின் அடக்கவிலையை காட்டிலும் மேலதிகமாக எத்தனை சதவிகிதம் இந்தியன் செலுத்த வேண்டும்? கடின உழைப்பால் பணம் சம்பாதித்தபின் அதை அனுபவிக்கும் முன் எவ்வளவு வரி செலுத்தவேண்டும்? எந்த எந்த அசையா சொத்து இனங்களை தனக்கு சொந்தமானது என கூற எவ்வளவு வரி மொத்தமாக ஆரம்பத்திலும் மேலும் அதிகமாக வருடா வருடம் எவ்வளவு வரி எங்கெங்கெல்லாம் செலுத்த வேண்டும்? இந்த நாட்டின் தனித்தனி மாநிலங்களும் தனித்தனி அரசாங்கங்களாக இயங்குவதனால் மாநில வரிகளும், உள்ளூர் வரிகளும், மத்தியில் பெரிய அரசாங்கம் நிர்வகிக்கப்படுவதால் அதற்கு என தனியாக ஒரு மேலதிக சிங்கப்பங்கு வரியும் ஒழுங்காக செலுத்தியபின் இவன் யோசிக்கிறான்... 'எங்காவது ஒரு சிறிய நாடாக, ஒரே அரசாங்கம் உள்ள இடமாகப் பார்த்துப் போய்விடுவதுதான் நல்லது' என தீர்க்கமான முடிவுக்கு வந்து விடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அப்படி எங்கேயும் போக வசதி இல்லாதவன் உழைக்காமலும், உற்பத்தி செய்யாமலும், நுகர விருப்பமில்லாமலும் இயலாமையாலும் " வாழ்வே மாயம், உலகே மாயம் " என தத்துவம் கண்டு மூலையில் முடங்கினாலும் ஆச்சரியமில்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)