ஜி.எஸ்.டி.,யை அதிகரிக்க கூடாது: மாநில முதல்வர்களுக்கு கோரிக்கை ஜி.எஸ்.டி.,யை அதிகரிக்க கூடாது: மாநில முதல்வர்களுக்கு கோரிக்கை ... தங்கம் வரலாறு காணாத உச்சம்.... கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது தங்கம் வரலாறு காணாத உச்சம்.... கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது ...
ஜனவரியிலும் வாகன விற்பனை சரிவு; தப்பியது மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
02:49

புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்து உள்ளது.

இது குறித்து, எப்.ஏ.டி.ஏ., மேலும் தெரிவித்துள்ளதாவது: பயணியர் வாகன விற்பனை, கடந்த ஜனவரியில், 4.61 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 2.91 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இதுவே, 2019ம் ஆண்டு ஜனவரியில், மொத்தம், 3.05 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

வர்த்தக வாகனங்கள்:

இருசக்கர வாகன விற்பனை, கடந்த ஜனவரியில், 8.82 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், 13.90 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில், 12.67 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில் விற்பனை, 6.89 சதவீதம் குறைந்து, 82 ஆயிரத்து, 187 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில், 88 ஆயிரத்து, 271 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை, கடந்த ஜனவரியில், 9.17 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது.

இம்மாதத்தில், 63 ஆயிரத்து, 514 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில், 58 ஆயிரத்து, 178 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த அளவிலான விற்பனை, 7.17 சதவீதம் குறைந்து, மொத்தம், 17.50 லட்சம் வாகனங்கள், கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில், 18.85 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வாகன விற்பனை, கடந்த ஜனவரியில் சரிந்துள்ளது குறித்து, இக்கூட்டமைப்பின் தலைவர் அஷிஷ் ஹர்ஷராஜ் கூறியதாவது: மூன்று சக்கர வாகன விற்பனையை தவிர்த்து, பிற வாகனங்களின் விற்பனை, தொடர்ந்து ஜனவரி மாதத்திலும் சரிவைக் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, வாடிக்கையாளர்கள் இன்னும் முடிவெடுக்க தயங்குவது தான்.

தேவைகள் குறைவு:

‘பாரத் ஸ்டேஜ் – 4’லிருந்து, பாரத் ஸ்டேஜ் – 6க்கு வாகனங்கள் மாறுவதும், அவர்கள் முடிவெடுப்பதை தாமதப்படுத்தி உள்ளது.பட்ஜெட்டில், மத்திய மற்றும் நீண்ட கால அளவில் வளர்ச்சிக்கான அம்சங்கள் இருந்தாலும், அவை உடனடியாகவோ அல்லது நேரடியாகவோ வாகன துறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒட்டுமொத்த பொருளாதார நிலை மற்றும் மாசு உமிழ்வு விதி, பி.எஸ்., – 6 மாற்றம், வாடிக்கையாளர்களின் பலவீனமான நம்பிக்கை ஆகியவை காரணமாக, தேவைகள் நிலைமையில் சமீப காலத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும், குறிப்பாக வாகனத் துறைக்கும் சாதகமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்குமாறு, அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். விரைவாக வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதற்கு, அது எங்களுக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)