சீனாவால் பாதிப்புக்கு உள்ளான  நிறுவனங்களுக்கு வாராக்கடனில் சலுகை சீனாவால் பாதிப்புக்கு உள்ளான நிறுவனங்களுக்கு வாராக்கடனில் சலுகை ... புரிதல் இல்லாத எதிர்பார்ப்பு புரிதல் இல்லாத எதிர்பார்ப்பு ...
‘வாடிக்கையாளரை ஜெயிக்க டெலிவரி முக்கியம்!’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2020
10:57

மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், ‘ஆன்லைன்’ கம்பெனிகளுக்கு இருக்கும் பெரிய தலைவலி, சரியான நேரத்தில் டெலிவரிசெய்வது தான்.உணவு பொருளை டெலிவரி செய்யும் கம்பெனிகளில் ஆர்டர் செய்யும் போதே, உங்கள் ஆர்டர், இத்தனை நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று குறிப்பிடுகின்றனர்.

இதில், அருகிலுள்ள டெலிவரி செய்பவரை தொடர்பு கொள்வது, அவர் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஓட்டலுக்கு செல்லும் நேரம், அங்கிருந்து அந்த ஆர்டருக்கான உணவை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் நேரம், வீட்டை வந்தடையும் நேரம், இத்தனையையும் கணக்கில் எடுத்து கொண்டு, டெலிவரி செய்யப்படுவதற்கு பின்புலமாக இருப்பது, இத்தகைய சாப்ட்வேர்களே. பல நேரங்களில், வாடிக்கையாளர் சரியான முகவரியை கொடுப்பதில்லை. வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள முகவரி சரியாக இருக்கிறதா? என்று சரிபார்க்க கம்பெனிகள், பல கோடி ரூபாயை தொழில்நுட்பத்துககு செலவிடுகின்றனர்.போட்டிகள் நிறைந்த உலகம் இது. இந்த டெலிவிரி, ‘ஆன்லைன்’ வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லை, மற்ற வியாபாரத்தில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்பது, மறுக்கமுடியாத உண்மை.ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் ஏற்படுத்தப்படுமா?உத்தரப்பிரதேசத்தில் துவக்கப்பட்டுள்ள ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் இணையதளம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதில், அந்த மாநிலத்தை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நபர்களுக்கு, அவர்கள் வெளிநாடுகளில் சென்று, ஏற்றுமதி சம்பந்தப்பட்ட கண்காட்சியில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. உங்கள் கம்பெனி கேட்லாக் பிரிண்ட் செய்ய, இணையதளத்தை உருவாக்க, ஆண்டுக்கு அதிகபட்சமாக, 60 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக கொடுக்கிறது.வெளிநாடுகளுக்கு ‘ப்ராடக்ட் சாம்பிள்’ அனுப்பும் போது ஆகும் செலவில், 75 சதவீத மானியமாக அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இதுதவிர, இன்னும் பல சலுகைகளும், வர்த்தகர்களுக்கு கிடைக்கும். தமிழகத்திலும், இதுபோல வசதிகளை ஏற்றுமதியாளர்களுக்கு செய்து தந்தால், ஏற்றுமதியில் இன்னும் சிறக்க முடியும்.
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com.
www.startup business news.com.
98204-51259.
–சேதுராமன் சாத்தப்பன்–

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 23,2020
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)