பதிவு செய்த நாள்
26 பிப்2020
07:16
புதுடில்லி: நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 4.7 சதவீதமாக இருக்க வாய்ப்பிருப்பதாக, கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம், பொருளாதார நிபுணர்களிடம் எடுத்த கருத்துக் கணிப்பில் இவ்வாறு தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ராய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் வளர்ச்சி, 4.5 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில், 4.7 சதவீதமாக இருக்கும். இந்த காலாண்டில், 5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என, 90 சதவீத நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் வளர்ச்சி குறைந்தது. இருப்பினும், அதன்பின், அக்டோபர் முதல், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், வளர்ச்சி அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதற்கு, கிராமப்புற தேவைகள் அதிகரித்துள்ளதும், தனியார் நுகர்வு கூடியிருப்பதும் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4.7 சதவீதமாக இருக்கும் என கருதப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|