பதிவு செய்த நாள்
26 பிப்2020
07:18
புதுடில்லி: இந்திய ரிசர்வ் வங்கி, அதன் அன்னிய செலாவணி கையிருப்பை, 550 பில்லியன் டாலராக அதிகரித்துக் கொள்ளும் என எதிர்பார்ப்பதாக, ‘பேங்க் ஆப் அமெரிக்கா’ தெரிவித்துள்ளது.
சமீப காலமாக, ரிசர்வ் வங்கி, தன்னுடைய அன்னிய செலாவணி இருப்பை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வாரமும், புதிய சாதனை அளவை படைத்து வருகிறது. கடந்த, 14ம் தேதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி இருப்பு, 476 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது; இதன் மதிப்பு, இந்திய ரூபாயில், 33.80 லட்சம் கோடி. இது, இதுவரை இல்லாத வரலாற்றுச் சாதனையாகும்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, தன்னுடைய இருப்பை, 550 பில்லியன் டாலராக அதிகரித்துக் கொள்ளும் என, பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 39.05 லட்சம் கோடி ரூபாய். இறக்குமதி, அன்னிய முதலீடு, வெளிநாட்டு கடன் உள்ளிட்ட விஷயங்களை சரியாக நிர்வகிப்பதற்காக, ரிசர்வ் வங்கி தன் இருப்பை அதிகரித்துக் கொள்கிறது. இவ்வாறு பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் மாதத்தில், 1 டாலரின் மதிப்பு, 70.05 ரூபாயாக இருக்கும் என்றும் கணித்து தெரிவித்துள்ளது, பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|