‘கொரோனா’ வைரஸால் வட்டி குறையலாம்: ரிசர்வ் வங்கி குறித்து, டி.பி.எஸ்., வங்கியின் ஆய்வறிக்கை‘கொரோனா’ வைரஸால் வட்டி குறையலாம்: ரிசர்வ் வங்கி குறித்து, டி.பி.எஸ்., ... ...  ‘மாஸ்டர் கார்டு’ பங்கா விலகல் ‘மாஸ்டர் கார்டு’ பங்கா விலகல் ...
உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
00:33

புதுடில்லி: ‘சீனாவை உலுக்கி வரும், ‘கொரோனா’ வைரஸ் உலக நாடுகளுக்கும் பரவினால், உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது’ என, ‘மூடிஸ்’ என்ற பிரபல அமெரிக்க வர்த்தக மற்றும் நிதிச்சேவை நிறுவனம், எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக, ‘மூடீஸ் அனலிடிக்ஸ்’ அமெரிக்க நிறுவனத்தின், தலைமை பொருளாதார வல்லுனர் மார்க் ஸாண்டி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:சீன பொருளாதாரத்திற்கு பலத்த அடியை கொடுத்துள்ள, கொரோனா வைரஸ் தாக்குதல், இப்போது, ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் தாக்கம், பல விதங்களில், உலக பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. சுற்றுலாசீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் நோய், அங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அந்நாட்டின் சுற்றுலா பயணம் மற்றும் தொழில் முழுமையாக முடங்கியுள்ளது.உலக விமான நிறுவனங்கள், சீனாவுக்கு தங்களின் பயண சேவையை நிறுத்தியுள்ளன. சொகுசு கப்பல் நிறுவனங்கள், ஆசியா – பசிபிக் பகுதியை தவிர்க்கின்றன.இது, அமெரிக்கா உட்பட உலகின் முக்கிய சுற்றுலா மையங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், ஆண்டுக்கு, 30 லட்சம் சீன சுற்றுலா பயணியர், அமெரிக்கா செல்வது வழக்கம். அது, கடந்த சில மாதங்களாக தடைபட்டுள்ளதால், அமெரிக்காவின் சுற்றுலா துறை படுத்து உள்ளது.அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் பிற நாட்டினரில், சீனர்கள் தான், அதிகமாக செலவு செய்பவர்கள்.இந்நிலையில், இத்தாலியின் மிலன் நகரில், கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதால், ஐரோப்பிய கண்டத்தின் முக்கிய சுற்றுலா கேந்திரமாக விளங்கும் இத்தாலியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீன தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளதால், அங்கிருந்து வரும் உதிரி பாகங்களை நம்பியுள்ள அமெரிக்காவின், ‘ஆப்பிள், நைக், ஜெனரல் மோட்டார்ஸ்’ போன்ற நிறுவனங்கள், பல விதமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இதனால், உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை ஏறும் அபாயம் உள்ளது.அமெரிக்காவிலிருந்து சீனா எவ்வளவு இறக்குமதி செய்கிறது என்பது, கேள்விக்குரிய அம்சமாக இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சீன வியாபாரத்தை நம்பி, பொருட்களை உற்பத்தி செய்துள்ள, தானியங்களை விளைவித்துள்ள அமெரிக்க விவசாயிகளை காப்பாற்ற, அதிபர் டிரம்ப், சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.ஏனெனில், எண்ணெய், தாமிரம், சோயா பீன்ஸ், பன்றிக்கறி போன்றவற்றை, சீனர்கள் தான் அதிக அளவில் வாங்குவது வழக்கம்.அமெரிக்காவில் அதிக அளவில் உற்பத்தியாகும் இந்த பொருட்களுக்கு, சீனத் தேவை குறைந்துள்ளதால், விலை வீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.சீனாவுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளதால், அமெரிக்காவில், பெட்ரோலிய பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்து, பெட்ரோலிய பொருட்களுக்கு கொஞ்சம் குறைவாகவே, அமெரிக்கர்கள் செலவிட வேண்டியுள்ளது.

ஆனால், அதன் தாக்கம் எரிசக்தி, சுரங்கம், விவசாய துறைகளில் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.அதுபோல, வளரும் பொருளாதார நாடுகளான ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருட்கள் உற்பத்தி பாதிப்படையும் நிலையும் உருவாகியுள்ளது. முதலீடுஅமெரிக்க அதிபர் தேர்தல், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றம், பெரிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் போன்றவற்றால், உலக வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம், பிற நாடுகளுக்கும் பரவி, உயிர் சேதத்தை ஏற்படுத்துவது, பல விதமான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.உலக அளவில், புதிய முதலீடுகள் மற்றும் தொழில் திட்டங்களில் ஈடுபட நினைத்திருந்தவர்கள், அமைதி காக்கின்றனர்.தங்கள் பணியாளர்கள் நோய்வாய்ப்படலாம் என்ற அச்சத்தை அவர்களுக்கு, கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலக பொருளாதாரம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில், அவர் தெரிவித்துள்ளார்.தொழில்சிவப்பு மிளகாய் ஏற்றுமதி பாதிப்புசீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியாவிலிருந்து அந்த நாட்டிற்கு ஏற்றுமதியாகும் சிவப்பு மிளகாய் தடைபட்டுள்ளது. இதனால், மொத்த விற்பனையாளர்களும், ஏற்றுமதியாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.இந்தியாவில் அதிகமாக விளையும் சிவப்பு மிளகாயை, அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா தான் முதன்மையானது. கடந்த ஆண்டு, 5,411 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆனது. இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கிறது; ஏற்றுமதிக்கு ஏராளமான மூட்டைகள் தயாராக உள்ளன. ஆனால், வாங்க தயாராக சீனா இல்லை.ஏற்கனவே சீனாவுக்கு அனுப்பிய ஏற்றுமதிக்கான பணமே, இன்னும் சரியாக வரவில்லை. அதுபோல, தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றி லும், இதே நிலை நீடிக்கிறது. இதனால், இந்திய சிவப்பு மிளகாய் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஆனால், அதே நேரம், உள்நாட்டில் மசாலா பொடி தயாரிப்பாளர்கள் மத்தியில், சிவப்பு மிளகாய்க்கு நல்ல தேவை உள்ளது. இதனால், கிட்டங்கிகளில் முடங்காமல், மிளகாய் வர்த்தகம் சுறுசுறுப்பாக நடக்கிறது என, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)