பதிவு செய்த நாள்
28 பிப்2020
00:53

புதுடில்லி: இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ தெற்காசிய நாடுகளை ஒருங்கிணைத்து, தெற்காசிய மோட்டார் வாகன துறைக்கான கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என, பரிந்துரைத்துஉள்ளது.
தெற்காசியாவில், வாகன வர்த்தகத்தை அதிகரித்து, துறையை வலுவடையச் செய்வதற்காக இத்தகைய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என, இந்த கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
நிலைத்த வளர்ச்சி
இது குறித்து, சியாம் மேலும் அறிவித்துள்ளதாவது:தெற்காசியாவில், வாகன வர்த்தகத்தை அதிகரித்து, இத்துறையை மேலும் வலுவடையச் செய்வதற்காக, தெற்காசிய மோட்டார் வாகன கூட்டமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும்.இதில், இத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தெற்காசிய நாடுகளின் அரசு பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும்.இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், இலங்கை ஆகிய ஐந்து நாடுகளும், வாகனத் துறை உறவுகளை மேலும் விரிவுபடுத்த, இந்த அமைப்பு உதவிகரமாக இருக்கும்.
அண்மையில், இந்த ஐந்து நாடுகளின் வாகனத் துறை அமைப்பினர்களுடனான முதல் சந்திப்பின் போது, இது குறித்து முன்மொழியப்பட்டது.ஐந்து நாடுகளுக்கு இடையேயான ஒரு கூட்டமைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் மூலம், இரு தரப்புக்கும் பயனளிக்கக்கூடிய நிலைத்த வளர்ச்சியை உருவாக்க முடியும்.ஏற்கனவே இந்திய வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் வாகன பாகங்கள் தயாரிப்பாளர்கள், இந்தநாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
அரசுக்கு ஆலோசனை
நம் இப்போதைய நோக்கம், தெற்காசிய வாகன துறையினரிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி, அந்தந்த நாட்டு அரசுகளின் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கும், பெரிய அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே.அனைத்து நாட்டு உறுப்பினர்களும் தகவல்களை பரிமாறிக்கொள்வது, கூட்டாக கருத்தரங்குகள், வர்த்தக நிகழ்ச்சிகள் நடத்துவது, கண்காட்சிகள் நடத்துவது, தொழிற்சாலைகளை பார்வையிடுவது என பலவற்றை இந்த கூட்டமைப்பின் மூலம் செயல்படுத்த முடியும்.மேலும், வாகன கொள்கை, பழைய வாகன கழிவு கொள்கை உள்ளிட்டவற்றை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளையும், அமைப்பின் மூலம் வழங்க முடியும்.ஐந்து நாடுகளும் பரஸ்பரம் தங்களுக்கு இடையே, உள்கட்டமைப்பு வசதிகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.இவ்வாறு சியாம் தெரிவித்துள்ளது.
இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், இலங்கை ஆகிய ஐந்து நாடுகளையும் ஒருங்கிணைத்து, ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.தெற்காசிய சந்தை இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் வாகனங்களில், 16 சதவீதம் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் சந்தை மதிப்பு, ஆண்டுக்கு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர். இது, இந்திய மதிப்பில், 12 ஆயிரத்து, 700 கோடி ரூபாய்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|