‘பான் கார்டு’ செயலிழந்தால் என்ன செய்வது?‘பான் கார்டு’ செயலிழந்தால் என்ன செய்வது? ...  தெரிவது ஒளிக்கீற்றா? தெரிவது ஒளிக்கீற்றா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆன்­லை­னில் செய்­யக்­கூ­டிய வரி சேமிப்பு முத­லீ­டு­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2020
23:41

இந்த ஆண்­டுக்­கான வரிச்­சே­மிப்பு முத­லீட்டை இன்­ன­மும் தீர்­மா­னிக்­கா­த­வர்­கள், கடைசி நேர குழப்­பத்­தில் இருக்­க­லாம். பொருத்­த­மான முத­லீட்டை தேர்வு செய்­வது எப்­படி எனும் கேள்வி தவிர, முத­லீடு செய்­யும் வழி­மு­றை­யும் கூடு­த­லாக சிக்­கலை ஏற்­ப­டுத்­த­லாம். இந்­நி­லை­யில், ஆன்­லை­னில் மேற்­கொள்­ளக்­கூ­டிய வரி சேமிப்பு முத­லீடு­கள் சில:

ஐந்­தாண்டு வைப்பு நிதி: வங்­கி­களில் செய்­யப்­படும் ஐந்­தாண்டு வைப்பு நிதி, பர­வ­லாக பல­ரும் நாடும் வரி சேமிப்பு முத­லீ­டாக அமை­கிறது. இந்த வைப்பு நிதியை எளி­தாக ஆன்­லை­னி­லும் துவக்­க­லாம். கே.ஒய்.சி., பூர்த்தி செய்த வங்கி கணக்கு உள்­ள­வர்­கள், இணைய வங்­கிச்­ சேவை மூலம் வைப்பு நிதி துவக்­க­லாம்.
ஆன்­லைன் காப்­பீடு: காப்­பீடு திட்­டங்­களை ஆன்­லை­னில் வாங்­கும் போது, போதிய கால அவ­கா­சம் இருக்க வேண்­டும். டெர்ம் திட்­டமோ, யூலிப் திட்­டமோ, ஆன்­ லை­னில் பணம் செலுத்­த­லாம் என்­றா­லும், பாலிசி வழங்­கப்­பட சிறிது காலம் ஆக­லாம். மார்ச் மாத
கடை­சி­யில் பணம் செலுத்தி, ஏப்­ரல் முதல் வாரம் பாலிசி வழங்­கப்­பட்­டால், வரிச்­ச­லுகை பெற முடி­யாது.
பி.பி.எப்.,: நீண்ட கால முத­லீ­டாக கரு­தப்­படும், பொது சேம­நல நிதி­யான பி.பி.எப்., கணக்கை ஆன்­லை­னில் துவக்கி பணம் செலுத்­த­லாம். அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வங்­கி­யில், பி.பி.எப்., கணக்கு துவக்க சில நாட்­கள் ஆக­லாம். ஏற்­க­னவே, கணக்கு இருந்­தால், ஆன்­லை­னி­லேயே
தேவை­யான தொகை செலுத்­த­லாம்.

வீட்­டுக்­க­டன்: வீட்­டுக்­க­டன் பெற்­றி­ருப்­ப­வர்­கள் செலுத்­தும் மாதத்­த­வணை அல்­லது முன் கூட்­டியே செலுத்­தும் அசல் தொகைக்கு வரிச்­ச­லுகை கோர­லாம். பகுதி அளவு அசலை
முன்­கூட்­டியே செலுத்­து­வ­தன் மூலம், வரிச்­ச­லுகை பெறு­வ­தோடு,வட்டி சுமை­யை­யும்ஓர­ளவு குறைத்­துக் ­கொள்ள முடி­யும். இணைய வங்­கிச்­ சேவை மூலம் இதை செய்­ய­லாம்.

மருத்­துவ காப்­பீடு: மருத்துவ காப்­பீடு திட்­டங்­க­ளை­யும் ஆன்­லை­னில் வாங்­க­லாம். நிறு­வ­னங்­க­ளின் இணை­ய­த­ளம் மூலம் அணு­க­லாம். ஆனால், மருத்துவ பரி­சோ­தனை தேவைப்­ப­ட­லாம் என்­ப­தை­யும், அதற்கு அவ­கா­சம் தேவை என்­ப­தை­யும் மன­தில் கொள்ள வேண்­டும். இ.எல்.எஸ்.எஸ்., வகை மியூச்­சு­வல் பண்ட் முத­லீட்­டை­யும் நாட­லாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)