பதிவு செய்த நாள்
07 மார்2020
23:35

புதுடில்லி:‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், அதன் கடன்களை அடைப்பதற்கான தீர்மான திட்டத்தை, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, ‘ஆர்காம்’ என்றழைக்கப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், அதன் சொத்துக்களை விற்பதன் மூலம், 23 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட இருப்பதாக தெரிய வந்துள்ளது.குழு அனுமதிஇந்த தொகையிலிருந்து, 5,500 கோடி ரூபாய், சீன வங்கிகளுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை, சீன வங்கிகள் கொடுத்த அசலில், 55 சதவீதமாகும். இந்த திட்டத்தை, யு.வி., சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு கடன் வழங்கியோர் குழு அனுமதி வழங்கி உள்ளது.ஆர்காம் நிறுவனத்துக்கு மட்டுமின்றி, ‘ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் இன்ப்ராடெல்’ ஆகிய நிறுவனங்களின் கடன்களை அடைப்பதற்கான திட்டத்துக்கும், கடன் வழங்கியோர் குழு அனுமதி வழங்கியுள்ளது.
பாதுகாப்பான கடன்
ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் மொபைல் போன் கோபுரங்கள் மற்றும் பைபர் ஆகியவற்றை, ரிலையன்ஸ் ஜியோ, 4,700 கோடி ரூபாய்க்கு பெற்றுக் கொள்கிறது.யு.வி., நிறுவனம், ஆர்காம் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் சொத்துக்களை, 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறது.ஆர்காம் நிறுவனத்திற்கு மொத்தம், 49 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதில், 33 ஆயிரம் கோடி ரூபாய், பாதுகாப்பான கடன்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|