முதலீட்டாளர்களுக்கு மாற்று வாய்ப்புமுதலீட்டாளர்களுக்கு மாற்று வாய்ப்பு ...  ஒரு முதலீட்டுப் பாடம் ஒரு முதலீட்டுப் பாடம் ...
கல்­வி­ க­ட­னுக்கு விண்­ணப்­பிக்­கும் முன் அறிய வேண்­டிய அம்­சங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2020
00:06

உயர் கல்­விக்­கான செலவை சமா­ளிக்க கல்­விக்­க­டன் உத­வு­கிறது. பொதுத்­துறை வங்­கி­கள், தனி­யார் வங்­கி­கள் கல்­விக்­க­டன் வச­தியை அளிக்­கின்­றன. மாண­வர் கடன் என்­றும், இது குறிப்­பி­டப்­ப­டு­கிறது. உயர் கல்­விக்­கான செலவு அதி­க­ரித்து வரும் நிலை­யில், கல்­விக்­ க­ட­னுக்­கான தேவை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. கல்­விக்­க­டன் தொடர்­பான முக்­கிய அம்­சங்­கள் வரு­மாறு:

யாருக்கு கடன்: உயர் கல்வி பயி­லும் மாண­வர்­க­ளுக்கு கல்­விக்­க­டன் வழங்­கப்­ப­டு­கிறது. பெற்­றோர், உடன் பிறந்­த­வர், வாழ்க்­கைத்­ துணை கூட்டு விண்­ணப்­ப­தா­ர­ராக இருக்­க­லாம்.
கடன் தொகை, 4 லட்­சத்­திற்கு மேல் இருக்­கும் போது, கூட்டு விண்­ணப்­ப­தா­ரர் தேவை. 7.5 லட்­சத்­திற்கு மேல் இருக்­கும் போது ஈட்­டு­றுதி தேவை.


கடன் தொகை: கல்வி கட்­ட­ணம் மற்­றும் தங்­கு­மி­டம் போன்ற கல்வி சாராத செல­வு­க­ளுக்­கும் சேர்த்து கடன் பெற­லாம். கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு நேர­டி­யாக தொகை வழங்­கப்­படும்.
மற்­றக்­க­டன்­கள் போலவே இந்த கட­னும் செயல்­ப­டு­கிறது. படிப்பு முடிந்­த­தும் மாண­வர்­கள் மாதத்­த­வணை செலுத்த துவங்க வேண்­டும்.

எவ்­வ­ளவு தொகை: இந்­தியா மற்­றும் வெளி­நா­டு­களில் உயர் கல்வி பயில கடன் வச­தியை நாட­லாம். கடன் தொகை வரம்பு வங்­கிக்கு வங்கி மாறு­ப­ட­லாம். அதி­க­பட்­சம், 75 லட்­சம் ரூபாய் வரை பெற­லாம். கடனை செலுத்த, அதிகபட்­சம், 15 ஆண்டு அவ­கா­சம் அளிக்­கப்­படும். வெளி­நாட்டு கல்வி எனில், 1.5 கோடி ரூபாய் வரை பெற­லாம்.

வட்டி விகி­தம்: கல்­விக்­க­ட­னுக்கு வங்­கி­கள், 8.5 சத­வீ­தம் முதல், 15 சத­வீ­தம் வரை வட்டி
விகி­தம் வசூ­லிக்­க­லாம். ஒரு சிலவங்­கி­கள் வட்­டி­யில் சலுகை அளிக்­க­லாம். செயல்­முறை
கட்­ட­ணம் போன்­ற­வையும் பொருந்­தும். நிர்­வாக செல­வு­களும் விதிக்­கப்­ப­ட­லாம். பொது­வாக, கல்­விக்­கட்­ட­ணத்­தில், 80 முதல், 90 சத­வீ­தம் வரை அளிக்­கப்­ப­ட­லாம்.

தேர்­வில் கவ­னம்: கல்வி கடன் பெறும் போது, மதிப்பு மிக்க கல்வி நிறு­வ­னத்தை தேர்வு செய்­வ­தும், எதிர்­கால வேலை­வாய்ப்­புள்ள படிப்பை தேர்வு செய்­வ­தும் நல்­லது. கல்வி கடனானது, மாண­வர்­கள் பெறும் முதல் கடன் என்­ப­தால் அவர்­கள், ‘கிரெ­டிட் ஸ்கோரை’
உரு­வாக்கிகொள்­ள­வும் உத­வும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)