கல்­வி­ க­ட­னுக்கு விண்­ணப்­பிக்­கும் முன் அறிய வேண்­டிய அம்­சங்­கள்கல்­வி­ க­ட­னுக்கு விண்­ணப்­பிக்­கும் முன் அறிய வேண்­டிய அம்­சங்­கள் ...  ஒரு முதலீட்டுப் பாடம் ஒரு முதலீட்டுப் பாடம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இ.எல்.எஸ்.எஸ்., முத­லீடு தேர்வு செய்­வ­தற்­கான வழி­கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2020
00:15பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கமான போக்கு, புதிய கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இ.எல்.எஸ்.எஸ்., முதலீடு தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் பற்றி ஒரு அலசல்:

வரிச்­ச­லு­கைக்­கான முத­லீ­டு­களில், பங்­குச்­சந்­தை­யின் பலன் அளிக்­கும் முத­லீ­டு­களில் ஒன்­றாக, ‘இ.எல்.எஸ்.எஸ்.,’ எனப்­படும், ‘ஈக்­விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்’ அமை­கிறது. வரி சேமிப்பு, குறைந்தபட்ச லாக்-இன் காலம் ஆகிய அம்­சங்­களுடன், நீண்ட கால நோக்­கில்
பலன் அளிக்க கூடிய சிறப்பு அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கிறது.


வரி சேமிப்பை மட்­டும் பார்க்­கா­மல், பல­னை­யும் முக்­கி­ய­மாக கரு­து­ப­வர்­க­ளுக்கு இந்த
முத­லீடு ஏற்­ற­தாக அமை­கிறது. எனி­னும், பங்­குச்­சந்­தை­யின் ஏற்ற, இறக்­க­மான சூழ­லில், இ.எல்.எஸ்.எஸ்., முத­லீடு பொருத்­த­மாக இருக்­கும் எனும் கேள்வி பல முத­லீட்­டா­ளர்­கள் மன­தில் எழுந்­துள்­ளது.

இந்த ஆண்டு தாக்­கல் செய்­யப்­பட்ட பட்­ஜெட்­டில், புதிய வரு­மான வரி விகித வாய்ப்பு
உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ள­தால், புதிய முறை­யின் கீழ், இ.எல்.எஸ்.எஸ்., முத­லீடு பொருத்­த­மாக இருக்­கும் எனும் கேள்வி ஏற்­க­னவே எழுந்­துள்­ளது.


வரி சேமிப்பு முத­லீடு

புதிய முறை­யில் பல்­வேறு வழக்­க­மான வரிச்­ச­லு­கை­கள் பெற முடி­யாது என்­ப­தால், இ.எல்.எஸ்.எஸ்., முத­லீடு பல­னுள்­ள­தாக இருக்­கும் எனும் சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ளது.
இந்த கேள்­வியை பொறுத்­த­வரை, பழைய வரி விகி­தம் அல்­லது புதிய வரி விகி­தம் ஆகி­ய­வற்­றில் எது ஏற்­ற­தாக இருக்­கும் என்­பதை முத­லில் தீர்­மா­னிக்க வேண்­டும். அதன்பின் வரி சேமிப்பு முத­லீடு குறித்து இறுதி செய்ய வேண்­டும்.

நிதி இலக்கு முக்­கி­யம்

எனி­னும், வரி சேமிப்பை மட்­டும் மன­தில் கொண்டு முத­லீட்டை தேர்வு செய்­யக்­கூ­டாது என்று வல்­லு­னர்­கள் கூறு­கின்­ற­னர். இ.எல்.எஸ்.எஸ்., நீண்ட கால நோக்­கில் பலன் அளிக்க நாடும் முத­லீ­டாக இருப்­ப­தால், ஒரு­வர் தன் நிதி திட்­ட­மி­ட­லில், இதன் இடத்தை மன­தில் கொண்டு பார்க்க வேண்­டும்.


உயர்கல்வி, ஓய்வு கால திட்­ட­மி­டல் ஆகிய நிதி இலக்­கு­க­ளின் ஒரு அங்­க­மாக
ரு­தி­யி­ருந்­தால், இதை தொடர்­வதே ஏற்­ற­தாகஇருக்­கும். இத­னி­டையே பங்­குச்
­சந்தை­யின் ஏற்ற, இறக்­க­மான போக்­கும், முத­லீட்­டா­ளர்­களை கவ­லை­யில் ஆழ்த்­தி­யுள்­ளது.
பங்­குச்­சந்தை கடந்த வார­மும், அதற்கு முந்­தைய வார­மும் பெரும் சரி­வுக்கு உள்­ளா­னது.


பங்­குச்­சந்­தை­யின் ஏற்ற, இறக்­கம் தொட­ர­லாம் என, எதிர்­பார்க்­கப்­படு­வ­தால்,
முத­லீட்­டா­ளர்­கள் பலர், இ.எல்.எஸ்.எஸ்., முத­லீட்டை நிறுத்­தி­வி­டு­வது ஏற்­ற­தாக இருக்­குமா என, ஆலோ­ச­கர்­களை கேட்­க ­து­வங்­கி­யுள்­ள­னர். ஒரு சில முத­லீட்­டா­ளர்­கள்
முத­லீட்டை தள்­ளிப்­போ­டு­வது சரி­யாக இருக்­குமா என்­றும் கேட்­கும் நிலை உள்­ளது.

நீண்ட கால பலன்

பங்­குச்­சந்­தை­யின் ஏற்ற இறக்­கத்தை மீறி நீண்ட கால நோக்­கில் பலன் அளிப்­பதே, பங்கு
முத­லீடு மற்­றும் மியூச்­சு­வல் பண்டு முத­லீட்­டின் அடிப்­படை அம்­சம் என்­பதை மன­தில் கொள்ளவேண்­டும் என, வல்­லு­னர்­கள் இந்தகேள்­வி­க­ளுக்கு பதில் அளிக்­கின்­ற­னர்.


கடந்த, 10 ஆண்டு காலத்­தில் வரி சேமிப்பு நிதி­கள் உள்­ளிட்ட சம­பங்கு நிதி­கள் சரா­ச­ரி­யாக, 11 சத­வீத பலன் அளித்து வந்­துள்­ளன. எனவே நீண்ட கால நோக்­கில் இந்த முத­லீட்டை
தொடர்­வதே ஏற்­றது என்­கின்­ற­னர்.சந்­தை­யின் ஏற்ற, இறக்­க­மான போக்­கால், முத­லீட்டை பாதி­யில்கைவிட வேண்­டாம் என்­றும் வல்­லு­னர்­கள் பரிந்­து­ரைக்­கின்­ற­னர்.


நீண்ட கால நிதி இலக்­கிற்கு ஏற்ப முத­லீட்டை தொடர்­வ­தோடு, அடுத்த ஆண்டு முன்­கூட்­டியேதிட்­ட­மிட்டு, எஸ்.ஐ.பி., எனப்­படும் சீரான முத­லீடு வாய்ப்பு மூலம்முத­லீடு செய்­வது பொருத்­த­மாக இருக்­கும் என்­கின்­ற­னர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)