ஒரு முதலீட்டுப் பாடம் ஒரு முதலீட்டுப் பாடம் ...  ஜி.எஸ்.டி., தாக்கல் பிரச்னை ‘இன்போசிஸ்’ நிறுவனத்திற்கு கெடு ஜி.எஸ்.டி., தாக்கல் பிரச்னை ‘இன்போசிஸ்’ நிறுவனத்திற்கு கெடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அச்சம் என்பது மடமையடா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2020
00:39

கொரோனா வைரஸ் தாக்குதலும், ‘யெஸ் பேங்க்’ சரிவும் இந்திய பொருளாதாரத்தின் தலைமீது வந்து வடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதைப் புரிந்துகொள்வது எப்படி?

டிசம்பர் மாதத்தில், கொரோனா பற்றி சீனாவில் இருந்து செய்திகள் வெளிவர ஆரம்பித்தபோதே, முதலில் உஷாரானது பங்குச் சந்தைகள் தான். இது, பல நாடுகளுக்கு பரவுமோ, பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுமோ என்று கவலையை வெளியிட்டன, பங்குச் சந்தை ஆய்வு நிறுவனங்கள்.

மார்ச் தொடக்கத்தில், நிலைமை இன்னும் மோசமாகவே செய்தது. பலியானோர் எண்ணிக்கையைவிட, அதிலிருந்து பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான் பல்கிப் பெருகின. எதனால், எப்படி பாதிப்பு ஏற்படும் என்பதைத் தெரிந்துகொண்டு, நடவடிக்கை மேற்கொள்வதைவிட, பல நாடுகளும் அவசரகதியில் குதிக்கத் தொடங்கி விட்டன.

பாரீஸ், லண்டன் புத்தக கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று யூகமாகச் சொல்லப்படுகிறது. பிரச்னைஒவ்வொரு நாடும் ஆண்டு தோறும் மேற்கொண்டுவரும் பல்வேறு தொழில், வர்த்தக கண்காட்சிகளையும், துறைசார்ந்த சந்திப்புகளையும் ரத்து செய்துள்ளன. பல நாடுகளின் தலைவர்கள் தங்கள் பயணங்களை ஒத்தி வைத்துவிட்டனர்.


அவ்வளவு ஏன், கொரோனாவுக்குப் பயந்து, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஒன்றும் ஒத்தி, வைக்கப்பட்டுள்ளதாக செய்தி.இதனால், வழக்கமான சுற்றுலா பயணியரும் வர்த்தக பயணியரும் குறைந்து விட்டனர். அவர்களை நம்பியிருந்த ஓட்டல்களும் இதர சேவைத் துறைகளும் சரிந்துபோயுள்ளன. இன்னொருபக்கம், பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற வர்த்தகம் தேக்கநிலையை அடைந்துள்ளது.


கொரோனா கண்காணிப்பைவிட, அதைப் பற்றிய, ‘பிரேக்கிங்’ செய்திகள் தான் பீதியூட்டுகின்றன. உண்மைகளைவிட, கட்டுக்கதைகள் தான், ‘றெக்கை’ கட்டிப் பறக்கின்றன.சமூக வலைத்தளங்களிலும், இதர ஊடகங்களிலும், ‘திடீர்’ டாக்டர்களும், ‘திடுக்’ வைத்தியங்களும் தான் கோலோச்சுகின்றன. ஏற்கனவே தகிக்கும் பீதித் தீயில், தாங்கள் வார்ப்பது எண்ணெய் தான், தண்ணீர் அல்ல என்று பலருக்கும் புரியவதில்லை.

இதேபோல் இன்னொரு பீதி தான், யெஸ் பேங்க். அது சரிந்ததற்கு யாருடைய தவறு காரணம் என்றோ, யார் பொறுப்பு என்றோ பேசுவது ஒருபக்கம். ஆனால், தனியார் வங்கிகளே இப்படித் தான் என்று குற்றஞ்சாட்டுவது இன்னொரு பக்கம்.உடனே, பொதுத் துறை வங்கிகளை இணைப்பது தேவையில்லாத வேலை என்று முழக்கம் எழுப்புவதும், தனியார் வங்கிகளையெல்லாம் மீண்டும், 1969ல் இந்திரா காந்தி செய்ததைப் போல் தேசியமயமாக்க வேண்டும் என்று பேசுவதும், இந்தக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள்.

யெஸ் பேங்க் பிரச்னையில், கேட்கவேண்டிய கேள்விகள் வேறு. வங்கி நிர்வாகம் முறையற்று, தறிகெட்டுப் போனபோது, ஆர்.பி.ஐ., என்ன செய்துகொண்டு இருந்தது?


வாராக் கடன்கள் பெருகியபோது, அதை அப்போதே இழுத்துப் பிடித்து நிறுத்தாதது ஏன்? அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், எஸ்ஸெல் குழுமம் ஆகியவை வாங்கிய பெருங் கடன்களைத் திருப்பிச் செலுத்தாதபோது, அவற்றின் அடமானச் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும், ஏலத்துக்கு கொண்டு வரவும் யெஸ் பேங்க் என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்று விசாரித்திருக்கலாமே?


போதிய நிதி முதலீட்டை யெஸ் பேங்கினால் திரட்ட முடியாத போதே, இப்போது களமிறக்கியிருக்கும் எஸ்.பி.ஐ.,யையும், எல்.ஐ.சி.,யையும் அப்போதே கைகொடுக்கச் சொல்லியிருக்கலாமே?

யெஸ் பேங்க் நிர்வாகக் குழுவில், ஆர்.பி.ஐ.,யின் நியமன உறுப்பினர் ஒருவர் இருந்தாரே, அவர் என்ன தகவல்களை அல்லது எச்சரிக்கைகளை இந்திய அரசுக்குக் கொடுத்தார் அல்லது கொடுக்கவில்லை?

இதையெல்லாம் விட்டுவிட்டு, இந்திய வங்கித் துறையின் வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்குவது என்ன நியாயம்?

இரண்டு விஷயத்திலும் அடிப்படையில் இயங்குவது தற்காப்பு, பாதுகாப்பு என்பதெல்லாம் இல்லை. அச்சம் மட்டுமே.ஒரு சின்ன கணக்கைப் பார்ப்போம். கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை பெருகியிருந்த ஒரு நாள், பிப்ரவரி 10. அன்று மட்டும், 108 பேர் சீனாவில் பலியாயினர்.


பாதிப்பு

ஆனால், அன்று மட்டும் கேன்சரால் மரணமடைந்தோர், 26 ஆயிரத்து, 283 பேர்; இதய நோயால் இறுதிமூச்சை நிறுத்தியோர், 24 ஆயிரத்து, 641 பேர்; நீரிழிவினால், 4,300 பேரும், தற்கொலையினால், கொரோனாவைப் போல், 27.7 மடங்கு நபர்களும் இயற்கை எய்தினார்கள். யெஸ் பேங்கைப் போல் ஏற்கனவே பல வங்கிகள் சரிந்துபோயிருக்கின்றன. இப்போது சொல்லப்படும் அதே காரணங்கள் அப்போதும் சொல்லப்பட்டுள்ளன.


திறமையற்ற நிர்வாகமும், பேராசையும் என்றைக்குமே பெரும் பாதிப்புகள் தான்.ஆனால், இவை முடிவுகள் அல்ல. நமது பாதையில் சந்திக்கும் இடர்ப்பாடுகள். பல முறை வங்கிகளை மீட்டெடுத்திருக்கிறோம். ஒவ்வொரு முறை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்தும் மீண்டு வந்திருக்கிறோம். இதனால், புதிய மருத்துவ சிகிச்சைகளும், வங்கித் துறையில் புதிய விதிமுறைகளும் உருவாகியிருக்கின்றன.


நாம் புடம்போட்ட தங்கமாக மிளிர்ந்து இருக்கிறோம்.துணிச்சலும் போராட்டக் குணமும் தான் பக்கபலம். துவண்டு போய், முடங்கிப் போவதல்ல வாழ்க்கை. நம்மை வீழ்த்தக் கூடியவை நோயும், பொருளாதாரமும் அல்ல. மாறாக, அச்சமும் பீதியும் சந்தேகமும் தான். இதை உணர்ந்துகொண்டு, இவற்றைக் கைவிடுவது ஒன்றே, எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணை.

ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)