ஜி.எஸ்.டி., தாக்கல் பிரச்னை ‘இன்போசிஸ்’ நிறுவனத்திற்கு கெடு ஜி.எஸ்.டி., தாக்கல் பிரச்னை ‘இன்போசிஸ்’ நிறுவனத்திற்கு கெடு ...  கெடுவுக்குள் விற்க முடியுமா? வாகன முகவர்கள் அச்சம்! கெடுவுக்குள் விற்க முடியுமா? வாகன முகவர்கள் அச்சம்! ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைத்து அறிவித்தது, ‘மூடிஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
01:25

புதுடில்லி:உள்நாட்டு தேவை குறைந்து வருவதால், நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.3 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ்’ நிறுவனம், இதற்கு முந்தையகணிப்பில் இருந்து குறைத்து அறிவித்துள்ளது.
மூடிஸ் நிறுவனம், நடப்பு ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.4 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்தது. தற்போது, ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு காரணமாக, உள்நாட்டு தேவை குறையும் எனக் கருதுவதால், வளர்ச்சியை, 5.3 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.
இது குறித்து, மூடிஸ் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:சமீபகாலமாக, சீனாவுக்கு வெளியேயும் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது. இதன் காரணமாக, பல முக்கிய நாடுகளின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.இதனால், நடப்பு ஆண்டின், இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி குறையும் என, எதிர்பார்க்கலாம்.
‘ஜி – 20’ நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 2.1 சதவீதமாக இருக்கும். இது, முன்னர் கணித்ததை விட, 0.3 சதவீதம் குறைவாகும்.சீனாவின் வளர்ச்சி, முந்தைய கணிப்பான, 5.2 சதவீதத்திலிருந்து, 4.8 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வளர்ச்சி, 1.7 சதவீதத்திலிருந்து, 1.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.இந்தியாவைப் பொறுத்தவரை, 5.4 சதவீதத்திலிருந்து, 5.3 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)