ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் ‘ஸ்டார்ட் அப்’ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் ‘ஸ்டார்ட் அப்’ ...  பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்­குச்­ சந்தை சரிவு முத­லீட்­டா­ளர்­கள் என்ன செய்ய வேண்­டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2020
00:00

சந்தை ஏற்ற இறக்கத்தால் பதற்றமடைந்து வெளியேறுவதை விட, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை ஆய்வு செய்து, பொருத்தமான உத்தியை வகுப்பது ஏற்றதாக இருக்கும்.

‘கொரோனா’ வைரஸ் அச்­சம், பங்­குச்­சந்­தை­களை பதம் பார்த்து வரு­கிறது. இந்­திய பங்­குச்­சந்­தை­யும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. கடந்த வாரம், சந்தை வர­லாறு காணாத சரி­வுக்கு உள்­ளாகி, அதன் பின் மீண்­டது. சந்­தை­யில் ஏற்­பட்ட தொடர் சரிவு, பெரும்­பா­லான முத­லீட்­டா­ளர்
­களை கலக்­கத்­தில் ஆழ்த்­தி­யது.


கொரோனா வைரஸ் தாக்­கம் தொடர்­பாக கணிக்க முடி­யாத நிலை, சந்­தை­யின் போக்கு குறித்த குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த சூழ­லில், எதற்கு வம்பு என்று பங்­கு­களில் இருந்து வெளி­யேறி, பாது­காப்­பான முத­லீ­டு­களை நாடு­வது இயல்­பா­னது தான் என்­றா­லும், இந்த பதற்­றத்­தை­யும், அவ­ச­ரத்­தை­யும் தவிர்க்க வேண்­டும் என, வல்­லு­னர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.
சரி­வில் வாய்ப்பு

பங்கு முத­லீட்­டா­ளர்­கள் மட்­டும் அல்ல, மியூச்­சு­வல் பண்டு முத­லீட்­டா­ளர்­களும் கவலை அடைந்­துள்­ள­னர். சந்­தை­யின் சரிவு தவிர, யெஸ் பேங்க் நெருக்­கடி போன்ற கார­ணங்­கள் மியூச்­சு­வல் பண்டு முத­லீ­டு­க­ளின் செயல்­பாட்டை பாதித்­துள்­ளன.
பாது­காப்­பா­ன­தாக சொல்­லப்­படும், டெப்ட் பண்டு வகை நிதி­கள் கூட பாதிப்­பிற்கு இலக்­காகி உள்­ளன. எனி­னும், சந்­தை­யில் இருந்து வெளி­யேற நினைப்­ப­தை­விட, இந்த சூழலை
சாத­க­மாக்கி கொண்டு முத­லீட்டு தொகுப்பை பொருத்­த­மாக மாற்றி அமைக்க வேண்­டும்
என்­கின்­ற­னர்.

தற்­போ­தைய சூழ­லில், பங்­கு­களை விட தங்­கம் அல்­லது பத்­தி­ரங்­கள் ஈர்ப்­பு­டை­ய­தாக தோன்­றி­னா­லும், உள்­ளூ­ரில் தங்­கத்­தின் விலை ஏற்­க­னவே கடந்த மூன்று மாதங்­களில்,
19 சத­வீ­தம் அதி­க­ரித்­தி­ருப்­பதை மன­தில் கொள்ள வேண்­டும்.அரசு பத்­தி­ரங்­கள் மீதான
பல­னும் குறைந்­தி­ருக்­கிறது. மாறாக, சந்­தை­யில் சரிவு ஏற்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், குறைந்த விலை­யில் கிடைக்க கூடிய நீண்ட கால நோக்­கி­லானபங்­கு­களை தேர்வு செய்­வ­தில்
கவ­னம் செலுத்­த­லாம் என, வல்­லு­னர்­கள் ஆலோ­சனை கூறு­கின்­ற­னர். அதே நேரத்­தில் பொருத்­த­மில்­லாத பங்­கு­க­ளை­யும் விலக்­க­லாம்.

மியூச்­சு­வல் பண்டு முத­லீட்­டா­ளர்­களும், இதே போன்ற உத்­தியை பின்­பற்­ற­லாம். கடந்த மூன்று ஆண்­டு­களில், பல நிதி­கள் மோச­மான பலனை அளித்­துள்­ளன. அவற்றை ஆய்வு செய்து, பலன் தராத நிதி­களில் இருந்து வெளி­யேறி, அதே பிரி­வில் நல்ல செயல்­பாட்டை கொண்ட நிதி­களை நாட­லாம். அதி­லும் குறிப்­பாக, எஸ்.ஐ.பி., எனப்­படும், சீரான முத­லீடு வாய்ப்பை நாடி­ய­வர்­கள், சரி­வால் முத­லீட்டை நிறுத்­தி­வி­டா­மல் இருக்க வேண்­டும்.
எஸ்.ஐ.பி., முத­லீடு

எஸ்.ஐ.பி., முறை முத­லீட்­டில், சரி­யும் சந்தை ரூபாய் சரா­சரி விளைவு மூலம், குறைந்த விலை­யில் அதிக யூனிட்­களை வாங்க வழி செய்­கிறது. எனவே, இந்த சூழ­லில் முத­லீட்டை தொடர்­வதே சரி­யா­னது. ஏனெ­னில், எஸ்.ஐ.பி., முத­லீடு நீண்ட கால நோக்­கில் பலன் அளிக்க வல்­லது.


மியூச்­சு­வல் பண்­டு­களில் நுழைய காத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்­கும் இது சரி­யான தரு­ணம்
என்­கின்­ற­னர். சந்­தை­யில் சரிவு மூலம், ‘கரெக்­‌ஷன்’ நிகழ்ந்­தி­ருப்­ப­தால், இதை ஒரு வாய்ப்­பா­க­வும் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்­கின்­ற­னர். இடர் தன்­மைக்­கேற்ப மொத்­த­மா­க­வும் முத­லீடு செய்­ய­லாம் என்­கின்­ற­னர்.

சந்­தை­யின் போக்கு பதற்­றத்தை அளிப்­ப­தாக இருந்­தா­லும், முத­லீடு ஒழுக்­கத்தை கடைப்­பி­டிப்­பது அவ­சி­ய­மா­கும். பங்­கு­கள் செயல்­பாட்­டிற்­கான அடிப்­படை அம்­சங்­களை மன­தில் கொண்டு செயல்­பட வேண்­டும். சந்­தை­யின் போக்கை கணிப்­ப­தை­விட, பொறுமை காப்­ப­தும், முறை­யான ஆய்வு அடிப்­ப­டை­யில்முத­லீட்டு உத்­தியை வகுத்­துக்­கொள்­வ­தன் மூலம், நீண்ட கால நோக்­கில் செல்வ வளத்தைஉரு­வாக்கி கொள்­ள­லாம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)