பேச்சுலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் பேச்சுலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ...  அரசு செய்ய வேண்டியது என்ன? அரசு செய்ய வேண்டியது என்ன? ...
உங்களுடன் உங்களை ஒப்பிடுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2020
03:58

ஆசை எது... பேராசை எது? பேராசை பெரு நஷ்டம் என்பது சரி தான். ஆனால், பெரிதாக கனவு காண வேண்டும் என்று சொல்லி விட்டு, பேராசைப்பட்டால் எல்லாம் போய் விடும் என்றால், எதை எடுத்துக் கொள்வது? இப்படி ஒரு சந்தேகம் வரலாம். இதை முதலில் தெளிவாக புரிந்து கொள்வோம்.எதை நீங்கள் உளமார நம்பி, நேசித்து அதை நோக்கிச் செல்கிறீர்களோ, அது உங்களுக்கு கிடைக்கும். இது பிரபஞ்ச விதி. காரணம், அந்த எண்ண அலைகள் அதற்கான உணர்வுகளையும், செயல்களையும் ஊக்குவிக்கும்;

அது, அதற்கான மனிதர்களையும், வாய்ப்புகளையும் கவர்ந்து வரும். இதில் சந்தேகமே வேண்டாம்.ஒன்றையே குறி என்று எண்ணுபவர்கள், அதை உளமார விரும்புகின்றனர்; அது கிட்டும் என்று எண்ணுகின்றனர்; கிடைக்காத போதே, கிடைத்தது போல கனவு காண்கின்றனர்.குறிக்ேகாள்அதைத் தவிர, வேறு எண்ணமோ, உணர்வோ இல்லை. அவர்கள் பார்வையில் மற்றவர்கள் இல்லை. இதனால், அவர்கள் குறிக்கோளை, அவர்கள் கணிப்பிற்கும் முன்னரே பெறுகின்றனர்.இது, பிறர் கண்களுக்கு வெறும் அதிர்ஷ்டம் என்று கூட தோன்றலாம். இப்படிப்பட்ட குறிக்கோள்களுக்கு சின்னது, பெரியது என்ற பாகுபாடு இல்லை. இது, ஒரு காதல் நிலை போல.

அது தான், நம்மை செயற்கரிய செயல்களை செய்ய வைக்கும்.ஆனால், பேராசையின் விதை பொறாமை. ‘அவனெல்லாம் இப்படி இருக்கானே... நாம எப்ப அந்த அளவுக்கு வளர்வது?’ என்பது தான் ஆதார எண்ணம். இங்கு குறிக்கோள் கிடையாது; எப்படியாவது ஏதாவது செய்து, பணம் பண்ண வேண்டும் என்ற வெறி தான் இருக்கும். சீக்கிரம் செய்ய வேண்டும் என்ற அவசரத்தனம் உருவாகுகையில், அது தவறுகள் இழைக்க வைக்கும்.பிறர் வளர்ச்சி மேல் பொறாமை, எரிச்சல், சுய பச்சாதாபம், வருங்காலம் பற்றிய பயம் என, அனைத்தும் எதிர்மறை உணர்வுகள்.

இவை, அந்த அலைவரிசை தொடர்பான எண்ணங்களையும், செயல்களையும் தோற்றுவிக்கும். பெருமூச்சுஎவ்வளவு அறிவுப்பூர்வமாக இருந்தாலும், நிகழ்வுகள் இந்த உணர்வு நிலைகளுக்கே மீண்டும் இட்டுச் செல்லும். தோல்விகளிலிருந்து, இவர்கள் பாடம் கற்கத் தவறுவர். ‘எல்லாம் நம்ம தலையெழுத்து. அவன் ராசி பாரு... எங்கே இருந்தவன், இப்ப எங்கே இருக்கான்!’ என்று, பெருமூச்சு விட வைக்கும்.இன்று, குறிப்பாக இளைய வயதினர், எதையாவது செய்து, சீக்கிரம் செட்டில் ஆகணும் என்று எண்ணுகின்றனர். அதற்கு காரணம், தங்களை பிறருடன் தொடர்ந்து ஒப்பிட்டபடியே இருக்கின்றனர்.

‘என்ன பொருள் வைத்திருக்கிறேன் என்பதை பொறுத்துத் தான் எனக்கு மரியாதை’ என்று திடமாக நம்புகின்றனர்.உத்வேகம்அதையெல்லாம் வாங்க பணம் தேவை. இது தான் பேராசையின் ஊற்று, இதை செய்ய வேண்டும், இதை சாதிக்க வேண்டும் என்று எண்ணுகையில், அந்த உத்வேகம் நேர்மறையாகத் தான் இருக்கும். அந்த சாதனை நடக்கையில், செல்வமும் வந்து சேர்ந்திருக்கும். பணம் இங்கு சாதனையை தொடர்ந்து வரும். பணம் குறிக்கோள் இல்லை; ஆனால், சாதனை, பணத்தையும் சேர்த்து தரும்.இதற்கு உதாரணமாக சொல்வதெனில், இப்படி சொல்லலாம். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பெரிய ஆட்டக்காரர் ஆகி சாதிக்க வேண்டும் என்பது தான் அவர் எண்ணம், உணர்வு, செயல் எல்லாம். அதற்கு, தன் வாழ்க்கையை முழுதாக அர்ப்பணிக்கிறார். விளைவு? உலக சாதனையுடன் பணம், புகழ், அந்தஸ்து, உப தொழில்கள் எல்லாம் கிடைக்கின்றன. விளையாட ஆசைப்பட்ட போது, பெரிய ஆட்டக்காரன். ஆனால், நல்ல காசு வரும் என்று நினைத்து துவங்கவில்லை. அப்படி, காசை குறியாக வைத்திருந்தால், கவனம் கிரிக்கெட்டில் இருக்காது. என்ன ஓட்டம்எதை செய்தால், சீக்கிரம் காசு பண்ண முடியும் என்று இருக்கும். வெகு விரைவில், கிரிக்கெட்டை விட்டு வேறு ஏதாவது செய்யப் போயிருப்பார்.என்னிடம் தொழில் பிரச்னைகளுக்கு ஆலோசனைக்கு வருபவர்களிடம், தவறாமல் நான் சொல்லும் உளவியல் உத்தி, ‘பிறருடன் உங்களை ஒப்பிடாதீர்கள்’ என்று தான்! உங்களுடன் உங்களை ஒப்பிடுங்கள்.நேற்று இப்படி இருந்தேன்; இன்று இதை செய்கிறேன்; நாளை, இதை விட சிறப்பாக செய்வேன். இப்படி இருக்கட்டும் உங்கள் எண்ண ஓட்டம். ஒப்பீடுகள், உங்கள் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வற்ற வைக்கும். பேராசைபலர் தங்கள் பணியை, தொழிலை சிறப்பாக செய்ய முடியாததற்கு காரணமே, இந்த ஒப்பீடு தான்.‘எம்.பி.ஏ., படிச்சிட்டு, 30 ஆயிரம் ரூபாய் தான் சம்பாதிக்கிறேன். பெட்டி கடைக்காரன், மாசம், 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறான்!’ என்று அங்கலாய்ப்பு செய்பவர்களை பார்த்திருப்பீர்கள்.நீங்கள் காலை, 5:00 முதல் இரவு, 11:00 வரை இடைவெளியின்றி, வெயில், மழை பாராது, கல்யாணம் காட்சி என்று லீவு எடுக்காமல், வெயில், மழை மட்டுமல்ல, கொரோனா என்றாலும் வீட்டில் தங்காமல், விடுப்பு எடுக்காமல் உழைக்கத் தயாரா? கண்டிப்பாக இல்லை. ஈர்ப்பு தொழில் மேல் இல்லை; அதில் வரும் காசின் மேல் தான். இது, பொறாமையால் வரும் பேராசை.செய்யும் தொழிலை நேசியுங்கள்... பணம் உங்களை தேடி வரும்!

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)