பிணையம் இல்லாமல் சிறுதொழில் கடன் வேண்டுமா?பிணையம் இல்லாமல் சிறுதொழில் கடன் வேண்டுமா? ... வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கலுக்கு அவகாசம் - வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் - நிர்மலா வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கலுக்கு அவகாசம் - வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் - ... ...
வர்த்தகம் » ஜவுளி
முகக்கவசம், சானிடைசர் உற்பத்தி உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2020
14:04

‘கொரோனா’ அச்­சு­றுத்­தல் எதி­ரொ­லி­ யாக, முகக்­க­வ­ச­மும், சானி­டை­ச­ரும், அத்­தி­வா­சி­யப்­பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இவற்­றின் விற்­பனை, நாடு முழு­வ­தும், 500 மடங்கு அதி­க­ரித்­துள்­ளது; ஆயி­ரம் மடங்கு அதி­க­ரிக்­கும் வாய்ப்­பு­கள் உரு­வா­கி­யுள்­ளன.

தமி­ழ­கத்­தில், சென்னை, கோவை, திருப்­பூர் உள்­ளிட்ட மாந­க­ரங்­களில், இவற்­றுக்­கான தேவை பெரு­ம­ளவு அதி­க­ரித்­துள்­ளது. மால்­கள் உள்­ளிட்ட வணிக வளா­கங்­கள் அடைக்­கப்­பட்­ட­போ­தும், மாநி­லம் முழு­வ­தும் உள்ள, தொழிற்­சா­லை­கள் தொடர்ந்து இயங்­கி­வ­ரு­கின்­றன. குறிப்­பாக, தொழிற்­சா­லை­களில், சானி­டை­சர் பயன்­ப­டுத்­து­வ­து­டன், முகக்­க­வ­சங்­கள் அணிந்து, தொழி­லா­ளர்­கள் பணி­பு­ரிய வேண்­டி­யுள்­ளது. மருத்­து­வ­ம­னை­களில் என்­றில்­லாது, பொது இடங்­களில், பொது­மக்­கள், முகக்­க­வ­சம் அணிய வேண்­டி­ய­தும் கட்­டா­ய­மா­கி­யி­ருக்­கிறது.தேவை அதி­க­ரிக்­கும்­போ­தெல்­லாம், விலை அதி­க­ரிப்பு இயல்­பா­கிறது. ஆனால், கொள்ளை லாபத்­தில் விற்க நினைப்­பது பேராசை. முகக்­க­வ­சம், சானி­டை­சர் போன்­ற­வற்­றின் விலை­கள், அப­ரி­மி­த­மாக விற்­கப்­ப­டு­வ­தற்கு, இதுவே கார­ணம். அதிக விலைக்கு விற்­ப­வர்­கள் மீது, தற்­போது, நட­வ­டிக்­கை­கள் பாய்ந்து வரு­கின்­றன.‘‘சானி­டை­சரை, ஆரம்­பச் சுகா­தார மையங்­கள், நகர்ப்­பு­றச் சுகா­தார மையங்­கள், அரசு மருத்­து­வ­ம­னை­கள் போன்ற இடங்­களில், சுய­மா­கத் தயா­ரித்­துக்­கொள்ள முடி­யும். சானி­டை­சர் தயா­ரிப்­ப­தற்­கான மூலப்­பொ­ருட்­கள், முத­லில் அதிக வெப்ப அழுத்­தத்­து­டன் சுத்­தப்­ப­டுத்­தப்­பட்ட வேண்­டும்.

திருப்­பூ­ரில், இதன்­படி சானி­டை­சர்­கள் தயா­ரிக்­கப்­பட்டு, அரசு மருத்­து­வ­மனை, சுகா­தார நிலை­யங்­களில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. உல­கச் சுகா­தார அமைப்பு விதி­முறை, தமி­ழக சுகா­தார அமைச்­ச­கம் வழங்­கி­யுள்ள வழி­காட்­டல் படி இவை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றின் தயா­ரிப்பை அதி­கப்­ப­டுத்­து­வ­தன் மூலம், குறைந்த விலைக்­குச் இவற்­றைச் சந்­தைப்­ப­டுத்த முடி­யும்’’ என்­கின்­ற­னர், திருப்­பூர் மாவட்ட நிர்­வா­கத்­தி­னர்.திருப்­பூர் மாவட்­டத்­தில், மக­ளிர் திட்­டம் மூலம், முகக்­க­வ­சங்­களை வாங்கி விற்­பனை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. முதல்­கட்­ட­மாக, கலெக்­டர் அலு­வ­ல­கத்­தில், இந்த விற்­பனை துவங்­கி­யது. ‘‘அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­களில் இருந்து வாங்கி, மாவட்­டம் முழு­வ­தும் விற்­பனை செய்ய திட்­ட­மிட்­டுள்­ளோம். மாந­க­ராட்சி அலு­வ­ல­கங்­கள், ஒன்­றிய அலு­வ­ல­கங்­கள், ஊராட்சி அலு­வ­ல­கங்­கள் என, மக்­கள் எளி­தில் வந்து வாங்­கும் இடங்­களில், விற்­பனை மையம் அமைக்­கப்­படும். மக­ளிர் குழு­வி­னர் மூலம், முகக்­க­வ­சம் விற்­பனை பணி நடக்­கும். முகக்­க­வ­சம் ஒன்று, 20 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது. எனவே, மாவட்ட மக்­களும், கிரா­மப்­புற மக்­களும், மக­ளிர் குழு­வி­னர் விற்­கும், முகக்­க­வ­சங்­களை வாங்கி பயன்­ப­டுத்­த­லாம்’’ என்று கூறு­கின்­ற­னர் மக­ளிர் திட்ட அலு­வ­லர்­கள்.‘கொரோனா’வால், திருப்­பூ­ரில் ஏற்­று­மதி மற்­றும் உள்­நாட்டு ஆடை உற்­பத்தி கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு உப­க­ர­ணங்­க­ளு­டன் உற்­பத்­தி­யைத் தொடர்­வ­தாக தொழில் அமைப்­பு­கள் அறி­வித்­தி­ருக்­கின்­றன.

ஆர்­டர்­கள் இன்றி பாதிக்­கப்­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள் சில, தற்­போது கிராக்கி நில­வும், முகக்­க­வ­சங்­கள் உற்­பத்தி செய்­வ­தில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன. இதற்­கான தொழில்­நுட்­பம் வேறாக இருந்­தா­லும், ஆடை உற்­பத்தி நிறு­வ­னங்­கள், இதை எளி­தா­கக் கையா­ளக்­கூ­டிய விதத்­தில்­தான் இருக்­கிறது.மத்­திய அரசு, தொழில்­நுட்ப ஜவுளி தயா­ரிப்­புக்கு ஊக்­கு­விப்பு வழங்­கு­கிறது. முகக்­க­வ­சத் தயா­ரிப்­பு­களை ‘பிராண்­டட்’ நிறு­வ­ன­மாக திருப்­பூர் நிறு­வ­னங்­கள் மேற்­கொள்­வ­தற்­கான வாய்ப்­பு­களும் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன.திருப்­பூர் மாவட்­டம் என்­றில்­லாது, மாநி­லம் முழு­வ­தும் பல்­வேறு உள்­ளாட்சி அமைப்­பு­கள், சானி­டை­சர், முகக்­க­வ­சம் உள்­ளிட்­ட­வற்றை, தாங்­களே தரத்­து­டன் தயா­ரிக்­கத் துவங்­கி­யி­ருக்­கின்­றன. இதன் மூலம், நியா­ய­மான விலைக்கு மக்­கள் இவற்­றைப் பெற முடி­யும் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

எது சரியான முகக்கவசம்!‘‘சாதா­ர­ணத் துணி­யில் முகக்­க­வ­சங்­கள் தயா­ரிக்­கப்­பட்டு விற்­கப்­ப­டு­கின்­றன. இது கிரு­மித்­தொற்று பாது­காப்பு அளிப்­ப­தாக இருக்­காது. சுவா­சம், வைரஸ், பாக்­டீ­ரியா வடி­கட்டி அம்­சங்­க­ளு­டன் கூடிய, மூன்­ற­டுக்­குத் துணி­யில் தயா­ரிக்­கப்­படும் முகக் கவ­சங்­களே, கிரு­மித் தொற்­றில் இருந்து பாது­காப்பு தரும். இவற்­றுக்கு மூன்று வகை தரப் பரி­சோ­த­னை­களும் உள்­ளன. ‘கொரோனா’ பர­வலை தடுப்­ப­தற்கு, தரப் பரி­சோ­தனை செய்­யப்­பட்ட, கிருமி வடி­கட்­டும் தன்­மை­யுள்ள, முகக்­க­வ­சங்­க­ளைப் பன்­ப­டுத்த வேண்­டும்’’ என்­கின்­ற­னர், மருத்­துவ வல்­லு­னர்­கள்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)