பதிவு செய்த நாள்
25 மார்2020
04:42

புதுடில்லி : டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, நடப்பு ஆண்டில், சராசரியாக, 77 ரூபாயாக இருக்கும் என்றும், 2021ல், 80 ரூபாயாக இருக்கும் என்றும், ‘பிட்ச் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:ரிசர்வ் வங்கி, தன் கட்டுப்பாட்டுக்குள், யெஸ் பேங்கை கொண்டு வந்த நிலையில், முதலீட்டாளர்களிடம் இந்திய வங்கித் துறை குறித்த அச்சங்களால், துவக்கத்தில், ரூபாய் மதிப்பு சரியத் துவங்கியது.அதன் தொடர்ச்சியாக, கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படவும், சரிவு மேலும் அதிகரித்தது. இந்நிலையில், எங்கள் கணிப்பை திருத்தியுள்ளோம். இதற்கு முன், நடப்பு ஆண்டில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சராசரியாக, 73 ரூபாயாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில், 75 ரூபாயாக இருக்கும் என்றும் கணித்திருந்தோம்.
அதை, இப்போது மாற்றி, முறையே, 77 ரூபாய், 80 ரூபாய் என கணித்து உள்ளோம். இந்தியாவில், கொரோனா பாதிப்பு இப்போது தான் துவங்கி இருக்கிறது. வரும் மாதங்களில் பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், அது பொருளாதாரத்தையும் பாதிக்கும்.பொருளாதார சரிவுகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்து விடும். அதன் விளைவாக, ரூபாய் மதிப்பும் சரியும்.அடுத்த நிதியாண்டின் முடிவுக்குள், ரிசர்வ் வங்கி, 1.75 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பை அறிவிக்கும்.
இதையடுத்து, தற்போது, 5.15 சதவீதமாக இருக்கும் வட்டி விகிதம், 3.40 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|