பதிவு செய்த நாள்
31 மார்2020
04:51

புதுடில்லி; மத்திய அரசு, வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசத்தை, கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது.
இந்நிலையில், வீட்டிலிருந்து பணியாற்றி வரும் வருமான வரித் துறை அதிகாரிகள், முக்கியமான ஒரு பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதிகளவில் வரி கட்டும் நிறுவனங்கள், நபர்கள், வரி பாக்கி வைத்திருக்கிறார்களா என்பதை போன், அல்லது, ‘இ -மெயில்’ மூலமாக தொடர்பு கொண்டு கேட்டு, அதை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்துறை அதிகாரிகள் சங்கம், ‘இது நடைமுறையில் சாத்தியமில்லாதது; விபரங்கள் அனைத்தும் அலுவல கோப்புகளில் தான் இருக்கும். அதிகாரிகளின் வீடுகளில் இருக்காது. மேலும், பாக்கி வசூல் குறித்த தகவல்களை தினசரி வழங்குவதும் இயலாது.‘பல்வேறு சலுகைகளை கோரி வரும் இந்த சமயத்தில் வரி பாக்கி குறித்து இந்த தருணத்தில் அழுத்தங்கள் கொடுப்பது மனிதாபிமானம் கொண்டதாக இருக்காது’ என தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|