பதிவு செய்த நாள்
01 ஏப்2020
00:21

புதுடில்லி: இந்தியா, சீனா தவிர, மற்ற நாடுகள் அனைத்தும், பொருளாதார மந்தநிலைக்கு சென்றுவிடும் என, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் ஆய்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்த ஆண்டில், பல லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு, உலக பொருளாதாரமானது, மந்தநிலைக்கு சென்று விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா, சீனா ஆகியவற்றை தவிர்த்து, வளரும் நாடுகளுக்கு கடுமையான சிக்கல்கள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை கொண்ட வளரும் நாடுகள், இதற்கு முன் சந்தித்திராத வகையிலான பொருளாதார இழப்புகளை, கொரோனா வைரஸ் தாக்குதலால் சந்திக்கின்றன.இந்த நாடுகளை பாதிப்பிலிருந்து மீட்பதற்கு, 2.5 லட்சம் கோடி டாலர் தேவைப்படும்.மேலும், பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள், வெளிநாடுகளிலிருந்து செய்யப்படும் முதலீட்டில், 2 – 3 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இழப்பை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்திக்கும்.சமீப நாட்களில், வளர்ந்த நாடுகள் மற்றும் சீனா ஆகியவை, பல்வேறு நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளன.
முக்கியமான, 20 நாடுகள், 5 லட்சம் கோடி டாலர் அளவிலான நிதிச் சலுகைகளை அறிவித்து உள்ளன.எதிர்பாராத நெருக்கடியில், எதிர்பாராத வகையில் வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகைகள், உடலளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியின் அளவை குறைக்கும்.தெளிவான அறிகுறிகள்இருந்த போதிலும், நடப்பு ஆண்டில், உலக பொருளாதாரமானது மந்த நிலைக்கு சென்றுவிடும்.
மேலும், லட்சக்கணக்கான டாலர் இழப்பையும் ஏற்படுத்தி விடும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.இந்த பாதிப்பு, சீனாவையும், இந்தியாவையும் தவிர, வளர்ந்து வரும் நாடுகளில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும்.மோசமடைந்து வரும் உலகளாவிய நிலையால், வரும் நாட்களில் நிதி மற்றும் அன்னிய செலாவணி ஆகியவற்றில் நெருக்கடிகள் உருவாகும்.தொற்றுநோயால், வளரும் நாடுகளை பொருளாதார அதிர்ச்சிகள் தாக்கிய வேகம், 2008ம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை விட, வியக்கத்தக்க வகையில் அதிகமாக இருக்கிறது.
பொருளாதார வீழ்ச்சி தொடரும் நிலையில், அது குறித்து கணிப்பது கடினமாக இருப்பினும், வளரும் பொருளாதாரங்கள் மேம்படுவதற்கு முன், நிலைமை மோசமாகி விடும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன.பெரும் தாக்கம்சீனாவுக்கு வெளியே இந்நோய் பரவத் துவங்கிய இரண்டே மாதங்களில், மூலதன வெளியேற்றம், நாணய மதிப்பு குறைதல், ஏற்றுமதி வருவாய் இழப்பு, சுற்றுலா வருவாய் சுருங்குதல் என வளர்ந்த நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், உலக பொருளாதாரங்கள் அனைத்தும் சரிவை சந்திக்கும் நிலையில், சீனாவும், இந்தியாவும் எப்படி அதில் விதிவிலக்காக இருக்கும் என்பதற்கான விளக்கம், இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
உலக வங்கி தரும் அதிர்ச்சி
கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி தெரிவித்துள்ளது.நோய் தாக்குவதற்கு முன், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், 2020ல், 3.5 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேறுவர் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|