பதிவு செய்த நாள்
01 ஏப்2020
23:27

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகியின் விற்பனை, கடந்த மார்ச் மாதத்தில், 47 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது.கடந்த மார்ச் மாதத்தில், விற்பனை, 47 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. மொத்தம், 83 ஆயிரத்து 792 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.இதுவே, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மொத்தம், 1.58 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.
உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில், மொத்தம், 79 ஆயிரத்து, 80 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இது 46.4 சதவீத சரிவாகும்.ஆல்ட்டோ உள்ளிட்ட சிறிய ரக கார்கள் விற்பனை, 5 சதவீதமும்,விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை, 53.4 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.
ஏற்றுமதியை பொறுத்தவரை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 10 ஆயிரத்து, 463 கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில், 4,712 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இது 55 சதவீத சரிவாகும். இது ஒருபுறமிருக்க, கடந்த நிதியாண்டிலும், இந்நிறுவனத்தின் விற்பனை, 16.1 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம் மொத்தம், 15.63 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டான, 2018--_19ல் 18.62 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில், மட்டும் மாருதி சுசூகி நிறுவனம் 16.7 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|