பதிவு செய்த நாள்
01 ஏப்2020
23:31

புதுடில்லி:கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் வங்கிகள் இணைப்பு வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் பஞ்சாப் நேஷனல் பேங்கின் கிளைகளாக நேற்று முதல் செயல்படத் துவங்கிவிட்டன.பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளும் இணைக்கப்பட்டு, பஞ்சாப் நேஷனல் பேங்க் எனும் பெயரில் நேற்று முதல் செயல்படத் துவங்கியுள்ளன.இந்த இணைப்பினால், பஞ்சாப் நேஷனல் பேங்க் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.
இதனையடுத்து, இணைக்கப்பட்ட இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும், இனி பஞ்சாப் நேஷனல் பேங்கின் வாடிக்கையாளர்களாகவே நடத்தப்படுவர். வாடிக்கையாளர்கள் சந்தேகங்களை நீக்க, அனைத்து கிளைகளிலும் தனியான வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இதேபோல், சிண்டிகேட் பேங்க், கனரா பேங்குடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா பேங்க், கார்ப்பொரேஷன் பேங்க் ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும், அலகாபாத் பேங்க், இந்தியன் பேங்குடனும் இணைக்கப்பட்டுள்ளன.இருப்பினும், நாடு முடக்கத்தில் இருப்பதால், வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படாமல், பழைய முறையே தொடர்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|