பதிவு செய்த நாள்
01 ஏப்2020
23:44

புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் எட்டு முக்கிய துறைகளில், உற்பத்தி வளர்ச்சி, கடந்த, 11 மாதங்களில் இல்லாத வகையில், 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த உயர்வுக்கு நிலக்கரி, மின்சாரம், சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்தது முக்கிய காரணமாக அமைந்தது.நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை முக்கியமான எட்டு துறைகளாக கருதப்படுகின்றன.இத்துறைகளின் உற்பத்தி, இந்த ஆண்டு பிப்ரவரியில், 5.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு பிப்ரவரியில், 2.2 சதவீதம் அளவுக்கே வளர்ச்சியை கண்டது.இதற்கு முன், கடந்த ஆண்டு, மார்ச் மாதத்தில், 5.8 சதவீதம் வளர்ச்சியை பெற்றிருந்தது. அதன் பின், இப்போது பிப்ரவரியில் தான், 5.5 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.கடந்த பிப்ரவரியில் நிலக்கரி, சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே, 10.3 சதவீதம், 7.4 சதவீதம், 11 சதவீதம் என அதிகரித்துள்ளது.
இருப்பினும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு ஆகியவற்றின் வளர்ச்சி குறைந்துள்ளது.உரம், சிமென்ட் ஆகியவற்றின் உற்பத்தி முறையே, 2.9 சதவீதம் மற்றும் 8.6 சதவீதமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|