பதிவு செய்த நாள்
01 ஏப்2020
23:49

புதுடில்லி:சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., மூலம், கடந்த மார்ச் மாதத்தில், 97 ஆயிரத்து, 597 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.இது, கடந்த பிப்ரவரி மாதத்தில் வசூலான தொகையை விட குறைவாகும்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், 1.05 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வாயிலாக வசூல் ஆனது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் வசூல், 97 ஆயிரத்து, 597 கோடி ரூபாயாக குறைந்து விட்டது.இதில், மத்திய ஜி.எஸ்.டி., வசூல், 19 ஆயிரத்து, 183 கோடி ரூபாய் ஆகும். மாநில ஜி.எஸ்.டி., 25 ஆயிரத்து, 601 கோடி ரூபாய் ஆகும்.
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 44 ஆயிரத்து, 508 கோடி ரூபாயாகும். இதில் இறக்குமதி மூலமாக வசூலான, 18 ஆயிரத்து, 56 கோடி ரூபாயும் அடக்கமாகும்.கடந்த மார்ச், 31ம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம், 76.5 லட்சம் ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|