புதிய சிக்கலை எழுப்பும் கடை வாடகை பிரச்னைகள் புதிய சிக்கலை எழுப்பும் கடை வாடகை பிரச்னைகள் ...  கடன் சலுகை சுமையை எதிர் கொள்வது எப்படி கடன் சலுகை சுமையை எதிர் கொள்வது எப்படி ...
பாதுகாப்பு அம்சத்தால் ஈர்க்கும் சிறு சேமிப்பு திட்டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2020
00:23

வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு அலசல்.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது, சிறு முதலீட்டாளர்களையும், இந்த திட்டங்களை அதிகம் நாடும் ஓய்வூதியதாரர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் முதலான காலாண்டிற்கு, 70 முதல், 140 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அஞ்சலக வைப்பு நிதி, பி.பி.எப்., தேசிய சேமிப்பு சான்றிதழ், செல்வ மகள் திட்டம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது.


சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் மட்டும் மாற்றமில்லாமல் தொடர்கிறது. இந்த சூழலில், முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்று பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருப்பது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், இந்த வட்டி குறைப்பு எதிர்பார்க்கப்பட்டதே என்று நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர்.

தொடர்வது நல்லது!கொரோனா நெருக்கடியின் பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ள, வட்டி விகிதம் கணிசமாக குறைக்கப்பட்ட சூழலில், இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது இயல்பானது என்றே கூறுகின்றனர். எனினும், வட்டி விகித குறைப்பை மீறி, சிறு சேமிப்பு திட்டங்கள் ஈர்ப்புடையதாகவே இருப்பதாகவும் கருதப்படுகிறது.

அஞ்சலக வைப்பு நிதி, பி.பி.எப்., செல்வமகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் முதலீடு பாதுகாப்பை கொண்டிருப்பதோடு, உறுதியான பலனை அளிக்கின்றன. இவை, முதலீடு உத்தியின் அடிப்படையாக அமைகின்றன. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஏற்படக்கூடிய தேக்க நிலை ஆகியவற்றை மனதில் கொள்ளும் போது, பாதுகாப்பான சிறு சேமிப்பு திட்ட முதலீடுகளை தொடர்வதே ஏற்றதாக இருக்கும். அதிலும் குறிப்பாக, இடர் தன்மையை தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது கூடுதலாக பொருந்தும்.

மேலும், வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிடும் போது, சிறு சேமிப்பு திட்டங்கள் அளிக்கும் பலன் கூடுதலாகவே இருக்கிறது. அண்மையில் ஸ்டேட் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்ததோடு, வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது.


நிதி இலக்குகள்

ஒப்பிட்டு நோக்கில், சிறு சேமிப்பு திட்டங்கள் அளிக்கும் பலன் கூடுதலானதாகவே உள்ளது. அதே நேரத்தில், டெப்ட் பண்ட் எனப்படும் கடன்சார் நிதிகளின் செயல்பாடும் அண்மைக் காலங்களில் திருப்திகரமாக அமையவில்லை. இந்த பிரிவில் அனைத்து நிதிகளும் குறைந்த பலனையே அளித்துள்ளன.இந்த அம்சங்களை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, முதலீட்டின் பாதுகாப்பை முக்கியமாக கருதுபவர்கள், தங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப, சிறு சேமிப்பு முதலீட்டை அமைத்துக்கொள்ளலாம்.


பி.பி.எப்., மற்றும் செல்வ மகள் திட்டம் போன்றவை, நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்றவை. அதே நேரத்தில் அதிக இடர் தன்மை கொண்டுள்ள முதலீட்டாளர்கள் கூட, நீண்ட கால இலக்குகளை அடைய, பொருத்தமான சிறு சேமிப்பு திட்டங்கள் தங்கள் முதலீட்டு தொகுப்பில் பெற்றிருப்பது பொருத்தமாக இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)