பதிவு செய்த நாள்
06 ஏப்2020
00:34

கொரோனா
ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் புதிய நிதியாண்டு
பிறந்திருக்கிறது. பொதுவாக, நிதி தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்து, தேவையான
மாற்றங்களை செய்ய நிதியாண்டின் துவக்கம் நல்ல வாய்ப்பாக அமையும்.
தற்போதுள்ள சவாலான சூழலில், எதிர்மறை தகவல்கள் உங்கள் நிதி விஷயங்களில்
தாக்கம் செலுத்த அனுமதிக்காமல் நிலைமையை எதிர்கொள்வதற்கான வழிகள்:
வீண்
கவலை:
உலகமே நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் சூழலில், அச்சமும், கவலையும்
அதிகரிக்கலாம். பொருளாதார உலகின் நிச்சயமற்ற தன்மை நிலைமையை மேலும்
மோசமாக்கலாம். ஆனால், நம் கட்டுப்பாட்டை மீறி விஷயங்கள் குறித்து அதிகம்
கவலைப்படுவதற்கு பதில், நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்கள் மீது கவனம்
செலுத்தலாம்.
வீட்டு வருமானம்:
வாழ்வாதாரமும், வேலை வாய்ப்பும் பாதிக்கப்பட
வாய்ப்புள்ள சூழலில், குடும்ப வருமானத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை
அளிக்க வேண்டும். நெருக்கடி காலங்களுக்கான அவசர கால நிதியின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் தருணம் இது. அவசர கால நிதி கையில் இருப்பதை
உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சுய ஆய்வு:
மோசமான செய்திகள், முதலீடு
தொடர்பான அவசர முடிவுகளை மேற்கொள்ள வைக்க லாம். எனவே, முதலில் உங்கள் நிலையை
ஆய்வு செய்யுங்கள். உங்கள் வேலைவாய்ப்புக்கு பாதிப்பு இல்லை எனில், உங்கள்
இடர் தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. முதலீடுகளிலும் அதிக மாற்றம்
தேவையில்லை.
குறைகள் என்ன?
உங்கள் நிதி நிலையை ஆய்வு செய்யும் போது,
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை கண்டறியலாம். போதிய வருமானம் இல்லாதது
அல்லது, முதலீடுகள் எதிர்பார்த்த பலனை தராமல் இருப்பது போன்றவற்றை
அறியலாம். வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கல் ஏதேனும் இருப்பதையும் அறியலாம்.
இவற்றை சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
யதார்த்தம் என்ன?
நெருக்கடியான சூழலில், குறுகிய கால நோக்கில் முடிவுகளை எடுக்க
வேண்டியிருக்கலாம். அதற்காக நீண்ட கால நோக்கத்தை கைவிட்டு விடக்கூடாது.
சந்தை சரிவில், முதலீட்டை விற்று வெளியேற நினைக்கலாம். ஆனால், சந்தை மீண்டு
வரும் வாய்ப்புள்ளதை மறக்க கூடாது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|