மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது எஸ்.பி.ஐ., ...  ரூ.4.65 லட்சம் கோடி  முதலீட்டாளர்களுக்கு லாபம் ரூ.4.65 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு லாபம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
00:09

புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், இதுவரை இல்லாத வகையில், 1.1 லட்சம் கோடி ரூபாயை இந்திய சந்தைகளிலில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.


கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, உலகளவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்ததை அடுத்து, இந்திய சந்தைகளிலிருந்து, இந்த அளவுக்கு பணத்தை வெளியே எடுத்துள்ளனர்.கடந்த மார்ச் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், பங்குச் சந்தைகளிலிருந்து, 61 ஆயிரத்து, 973 கோடி ரூபாயையும், பத்திரங்கள் சந்தையில் இருந்து, 56 ஆயிரத்து, 211 கோடி ரூபாயையும் எடுத்துள்ளனர்.


மொத்தத்தில், 1.18 லட்சம் கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை எடுக்கப் பட்டதில் இதுவே மிக அதிக அளவாகும்.ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற, முதல் இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும், உள்நாட்டு சந்தையிலிருந்து, 6,735 கோடி ரூபாயை, அன்னிய முதலீட்டாளர்கள் எடுத்துள்ளனர்.இதில், 3,802 கோடி ரூபாய், பங்குச் சந்தையிலிருந்தும், 2,933 கோடி ரூபாய் கடன் சந்தையிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை:நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் ... மேலும்
business news
புதுடில்லி:அண்மைக் காலமாக, ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடுகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன. ... மேலும்
business news
புதுடில்லி:பார்தி டெலிகாம் நிறுவனம் அதன் வசம் இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளை விற்பனை செய்து, 100 கோடி ... மேலும்
business news
மும்பை:ரிசர்வ் வங்­கி­யின் அறி­விப்­பு­கள், சந்­தை­யின் எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்­யாத கார­ணத்­தால், நேற்று ... மேலும்
business news
மும்பை:ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால், நேற்று பங்குச் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
மலரின் மகள் - EDINBURGH,United Kingdom
07-ஏப்-202020:22:27 IST Report Abuse
மலரின் மகள் இது எதோ நமது பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை அற்று வெளியேறியது போல எழுதப்பட்டிருக்கிறதாக அர்த்தம் வரும் போல இருக்கிறதே? உண்மையில் அவர்களுக்கு பணம் தேவை படுகிறது. அவர்களின் பரஸ்பர நிதிகளில் இன்சூரன்ஸ் என்ற பலவகையில் பணம் செலுத்தியவர்களுக்கும் இப்போதைக்கும் இன்னும் சில பல வாரங்களுக்கு பணம் தேவை படுகிறது. இப்போதே முன்னெச்சரிக்கையாக எடுத்து விட்டால் நலம் என்று பங்குகளை பணமாக்கி கொண்டிருக்கிறார்கள். அது தொடர்ந்து தேவைப்படுவதாக இருக்கிறது அவர்களுக்கு ஆகையால் எடுத்து கொண்டிருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் ஒன்றும் இந்தியாவின் சந்தைகளில் இருந்து வெளியேறி விடவில்லை முழுவதுமாக என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.
Rate this:
2 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)