விரைவில் எழுச்சி பெறும் துறைகள் தடை நீக்கத்துக்குப் பின், எவை எவை வளர்ச்சி காணும்? விரைவில் எழுச்சி பெறும் துறைகள் தடை நீக்கத்துக்குப் பின், எவை எவை ... ...  ரூ.29 கோடி தாமதக் கட்டணம் தள்ளுபடி ரூ.29 கோடி தாமதக் கட்டணம் தள்ளுபடி ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்­டேட் துறை­யில் தாக்­கம் எப்­படி இருக்­கும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2020
23:18

கொரோனா பாதிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி வீடு வாங்குபவர்கள் அறிந்திருப்பது அவசியம்.

பொரு­ளா­தா­ரத்­தின் எல்லா துறை­க­ளை­யும் கொரோனா வைரஸ் பாதித்­தி­ருக்­கிறது.
குறிப்­பிட்ட சில துறை­களில் இதன் தாக்­கம் அதி­க­மா­கவே இருக்­கிறது. தாக்­கத்­தின் அள­வும், அதி­லி­ருந்து மீண்டு வரும் வேக­மும், ‘லாக்­ட­வுன்’ காலத்தை சார்ந்­தி­ருக்­கிறது. இந்­நி­லை­யில், ரியல் எஸ்­டேட் துறையை பொறுத்­த­வரை, ஏற்­க­னவே பல்­வேறு காரணங்களால் தேக்­கம் நில­வும் சூழ­லில், கொரோனா தாக்­கம் இரட்­டிப்பு பாதிப்­பாக அமைந்­துள்­ளது. இதன்
கார­ண­மாக, ரியல் எஸ்­டேட் துறை­யில் ஏற்­ப­டக்­கூ­டிய மாற்­றங்­களை பார்க்­க­லாம்.

பணி­கள் தாம­தம்

ரியல் எஸ்­டேட் பணி­கள் மீண்­டும் துவங்க தாம­த­மா­கும் சூழல் நில­வு­கிறது. இதன் கார­ண­மாக, ஏற்­க­னவே கட்­டப்­பட்டு வரும் குடி­யி­ருப்பு திட்­டங்­களில் வீடு­கள் முடிக்­கப்­பட்டு ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வது தாம­த­மா­கும்.எனவே, புதிய வீட்­டிற்­காக காத்­தி­ருப்­ப­வர்­கள், இன்­னும் சற்று காலம், மாத வாடகை மற்­றும் வீட்­டுக்­க­ட­னுக்­கான மாதத்­த­வணை இரண்­டை­யும் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும்.இதற்கு தயார் செய்து கொள்­வது நல்­லது. குடி­யி­ருப்பு திட்­டங்­கள் ஆறு முதல், எட்டு மாதம் வரை தாம­த­மா­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. லாக்­ட­வுன் தளர்த்­தப்­பட்­டா­லும், உடன் குடி­யி­ருப்பு பணி­களை துவங்­கு­வது சாத்­தி­யம் இல்லை.


ஏனெ­னில், பெரும்­பா­லான தொழி­லா­ளர்­கள் தங்­கள் சொந்த ஊருக்கு சென்­று­விட்ட நிலை­யில், அவர்­கள் திரும்பி வந்து பணி­களை துவக்க வேண்­டும். கொரோனா அச்­சம் கார­ண­மாக, தொழி­லா­ளர்­களில் ஒரு பகு­தி­யி­னர் தங்­கள் சொந்த ஊரி­லேயே அதிக காலம் தங்க வாய்ப்­பு இருக்­கிறது. இது தொழி­லா­ளர் பற்­றாக்­கு­றையை ஏற்­ப­டுத்­த­லாம்.ரியல் எஸ்­டேட் பணி­கள் தாம­த­மா­கும் வாய்ப்­பி­ருக்­கும் நிலை­யில், விற்­ப­னை­யில் தேக்­கம் ஏற்­ப­ட­லாம் என்­றும்
அஞ்­சப்­ப­டு­கிறது.


பொது­வாக, தற்­போ­துள்­ளது போன்றநிச்­ச­ய­மற்ற சூழ­லில் பல­ரும், பெரிய அள­வி­லான
வாங்­கும் முடி­வு­களை தள்ளி வைப்­ப­துண்டு.எனவே, புதிய வீடு வாங்­கும் முடி­வை­யும் பலர் தள்ளி வைக்­க­லாம். இது விற்­ப­னை­யில்தாக்­கம் செலுத்­தும். ஏற்­க­னவே முதல் காலாண்­டில் விற்­பனை தேக்­கம் அடைந்­துள்­ள­தாக தெரி­கிறது.

விலை போக்கு

வீடு­கள் விற்­ப­னை­யில் சுணக்­கம் காணப்­பட்­டா­லும், விலை­யில் பெரிய அள­வில் மாற்­றம்ஏற்­பட வாய்ப்­பில்லை என்று வல்­லு­னர்­கள் கூறு­கின்­ற­னர். தற்­போ­துள்ள விலை நில­வ­ரமே தொட­ரும் என்­கின்­ற­னர்.எனி­னும், கட்­டு­மா­னப்­ப­ணி­கள் துவங்­கும் போது, ஒரு சில
நிறு­வ­னங்­கள் கைவ­சம் உள்ள வீடு­களை விற்­பனை செய்ய, தள்­ளு­படி வழங்க வாய்ப்­புஇருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கிறது.


அதே நேரத்­தில், கட்­டு­மா­னப்­பொ­ருட்­க­ளின் விலை உயர்­வை­யும் நிறு­வ­னங்­கள் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­கின்­ற­னர். ஆனால், இந்த விலை உயர்வை வாடிக்­கை­யாளர்­க­ளுக்கு மாற்­றி­த்த­ரு­வ­தும் சாத்­தி­யம் இல்லை.எதிர்­வ­ரும் மாதங்­கள் ரியல் எஸ்­டேட் துறைக்கு சவா­லாக அமை­யும் என்­றா­லும், கொரோனா பாதிப்­புக்கு பின், சர்­வ­தேச அள­வில் வர்த்­த­கம் எழுச்சி பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


மீட்­சிக்­குப்­பின் இந்­திய ரியல் எஸ்­டேட் துறை­யும் வளர்ச்சி காணும் என கரு­தப்­ப­டு­கிறது. சொந்த வீடு வாங்க திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்­களை பொறுத்­த­வரை மாறி­யி­ருக்­கும் சூழ­லில், தங்­கள் பட்­ஜெட்டை மறு பரீ­சி­லனை செய்­வது அவ­சி­யம்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)