பதிவு செய்த நாள்
15 ஏப்2020
23:27
புதுடில்லி:மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, நான்காவது காலாண்டில், விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம், 6 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த
நிதியாண்டின் நான்காவது காலாண்டில், நிறுவனம், 6 சதவீதம்
அளவுக்கு, நிகர லாபத்தில் சரிவை கண்டுள்ளது. நிகர லாபம், 2,345 கோடி
ரூபாயாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே
காலாண்டில், 2,494 கோடி ரூபாயாக இருந்தது.
வருவாயை பொறுத்தவரை,
மதிப்பீட்டு காலத்தில், 4.6 சதவீதம் அதிகரித்து, 15 ஆயிரத்து, 711
கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, அதற்கு முந்தைய நிதியாண்டில், 15
ஆயிரத்து, 6 கோடி ரூபாயாக இருந்தது.
தகவல் தொடர்பு சேவைகள் மூலமான வருவாய், கொரோனா பாதிப்பால், 0.7 – 0.8
சதவீதம்
அளவுக்கு குறைந்துள்ளது. அடுத்து வரும் காலத்தில் எப்படி இருக்கும்
என்பது குறித்து நிச்சயமற்ற நிலையே நீடிக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|