பதிவு செய்த நாள்
18 ஏப்2020
02:49

மும்பை : நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான, டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், நிகர லாபத்தில், சிறிய சரிவை கண்டுள்ளது.
டி.சி.எஸ்., நிறுவனம், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், நிகர லாபமாக, 8,049 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.இதுவே, அதற்கு முந்தைய நிதியாண்டின் இறுதி காலாண்டில், நிகர லாபம், 8,126 கோடி ரூபாயாக இருந்தது.வருவாயை பொறுத்தவரை, மதிப்பீட்டு காலத்தில், 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த, 2018 – -19ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், வருவாய், 38 ஆயிரத்து, 10 கோடி ரூபாயாக இருந்த நிலையில், மதிப்பீட்டு காலாண்டில், வருவாய், 39 ஆயிரத்து, 946 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.முழு ஆண்டு கணக்கில் பார்க்கும்போது, கடந்த நிதியாண்டில், நிகர லாபம், 2.7 சதவீதம் அதிகரித்து, 32 ஆயிரத்து, 340 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வருவாயை பொறுத்தவரை, 7.1 சதவீதம் அதிகரித்து, 1.57 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.‘மார்ச் காலாண்டின் துவக்கத்தில், சில பிரிவுகளில் நல்ல வளர்ச்சியை காண துவங்கி இருந்தது.‘இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல், நிறுவனத்தின் பாஸிட்டிவ்வான வேகத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது’ என, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|