பதிவு செய்த நாள்
18 ஏப்2020
03:01

புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்கள், ‘மொபைல் போன், பிரிஜ்’ உள்ளிட்ட சாதனங்களை, 20ம் தேதியிலிருந்து வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளன.
மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, பிராண்டு நிறுவனங்களும் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள துவங்கி உள்ளன.மத்திய அரசு, மே 3ம் தேதி வரை, தடையை நீட்டித்திருக்கும் நிலையில், சில பகுதிகளில், சில பொருட்களை விற்கவும், வினியோகம் செய்யவும் அனுமதி வழங்கி உள்ளது.இது குறித்து, மின்னணு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளதாவது:ஸ்னாப்டீல்: பொருட்களை வாங்குபவர்கள், விற்பவர்கள் என இரு தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் முயற்சியில் முழு வேகத்தில் இறங்கி உள்ளோம்.
கோடை கால ஆடைகள், சமையலறை பொருட்கள், இயர்போன், ஹெட்செட்ஸ், ஹோம் பிரின்டர்ஸ், பள்ளி தேவைக்கான டேப்லெட், வேலைவாய்ப்பு பரீட்சைகளுக்கான புத்தகங்கள் போன்றவற்றுக்கு மிக அதிகளவில் தேவை ஏற்பட்டுள்ளது.மேலும், விற்பனையாளர்களில், 50 சதவீதத்தினர், தங்கள் வணிகத்தை உடனடியாக துவக்க தயாராக இருக்கின்றனர். பலர், கள நிலையை பார்த்துவிட்டு, இறங்க திட்டமிட்டுள்ளனர்.அமேசான்: எங்கள் தளத்தின் விற்பனையாளர்களுக்கு, கமிஷனில் சலுகைகள் தர திட்டமிட்டுள்ளோம். மேலும், பாதுகாப்பான முறையில் பொருட்களை வினியோகம் செய்வது குறித்தும் ஆலோசித்து முடிவுகளை எடுத்து உள்ளோம்.
பிளிப்கார்ட்: லட்சக்கணக்கான விற்பனையாளர்களுடன் பேசி, அவர்களது தயாரிப்புகளை நுகர்வோர்களுக்காக தயாராக வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இதன் மூலமாக, சமூக இடைவெளியை பராமரிப்பதிலும் உதவிகரமாக இருக்கிறோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளன.மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி; பிராண்டு நிறுவனங்களும் இந்த சலுகையை, மூச்சு விடுவதற்கான வாய்ப்பாகவே கருதுகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|