பதிவு செய்த நாள்
18 ஏப்2020
03:30

புதுடில்லி : நாட்டின் எரிபொருள்விற்பனை, நடப்பு மாதத்தின் முதற்பாதியில், 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.
சமையல் எரிவாயுவை தவிர்த்து, நாட்டின் எரிபொருள் விற்பனை, 50 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. தடை காரணமாக, பயணம் மற்றும் பொருளாதார செயல்பாடுகள் குறைந்துவிட்டதால், எரிபொருள் நுகர்வு கடுமையாக குறைந்துவிட்டது.நடப்பு மாதத்தின் முதல் பாதியில், பெட்ரோல் விற்பனை, 64 சதவீதமும்; டீசல் விற்பனை, 61 சதவீதமும் குறைந்துள்ளன.விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை, 94 சதவீதம் குறைந்துள்ளது. பெரும்பாலான விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டு விட்டதால், இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விற்பனை சரிவைக் கண்டபோதிலும், சமையல் எரிவாயுக்கான தேவை, 21 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏழைகளுக்கு இலவச எரிவாயு வழங்குவதாக அரசு அறிவித்தது, இதற்கு காரணமாக அமைந்தது.ஒட்டுமொத்தமாக, பெட்ரோலிய பொருட்களின் விற்பனை, நடப்பு மாதத்தின் முதல் பாதியில், 50 சதவீதம் சரிந்துவிட்டது.இந்த தரவுகள், பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள், மாதத்தின் முடிவில் விற்பனை நிலவரத்தை வெளியிடுவர் என்பதால், அவை சேர்க்கப்படவில்லை.இதுவரை, இப்படி ஒரு விற்பனை வீழ்ச்சி ஏற்படவில்லை என, இத்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு, 17.79 சதவீதமாக குறைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|