பதிவு செய்த நாள்
18 ஏப்2020
03:47

மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டதை அடுத்து, நேற்று, இந்திய பங்குச் சந்தைகள், உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்று, 986.11 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தக இறுதியில், 31588.72 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, 1116 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும், சென்செக்ஸ், 3.22 சதவீத உயர்வை சந்தித்தது.இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், உயர்வை சந்தித்தது.நிப்டி, 273.95 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 9266.75 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 3.03 சதவீத உயர்வாகும்.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், ஆக்சிஸ் பேங்க் அதிக லாபத்தை ஈட்டியது.
இந்நிறுவன பங்குகள், 13 சதவீத உயர்வை சந்தித்தன. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் அறிவிப்புகளை அடுத்து, வட்டி விகிதங்களுடன் தொடர்புடைய வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாகன துறை நிறுவனங்கள் நேற்று விலை அதிகரிப்பை சந்தித்தன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|