பதிவு செய்த நாள்
24 ஏப்2020
02:10
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.8 சதவீதமாக குறையும் என, பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
இதுவரை காணாத தொற்றுநோய் பாதிப்பும், அதன் காரணமான நாடடங்கிய தடையும், வளர்ச்சியை பாதிப்பதாக இருக்கிறது என, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் அதன், உலக பொருளாதார பார்வை குறித்த ஆய்வறிக்கையில், இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 0.8 சதவீதமாக சரிவடையும் என்று தெரிவித்துள்ளது.மேலும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 6.7 சதவீதமாக எழுச்சி பெற வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வளர்ச்சி, மைனஸ் 0.2 சதவீதமாகவும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், மைனஸ் 0.1 சதவீதமாகவும் இருக்கும்.மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் வளர்ச்சி, 1.4 சதவீதமாக அதிகரிக்க துவங்கும். உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, நடப்பு, 2020ம் ஆண்டில், 3.9 சதவீதமாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|