‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 10 சதவீதம் சரியும் ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 10 சதவீதம் சரியும் ...  எண்ணம் தான் திசை காட்டி எண்ணம் தான் திசை காட்டி ...
'செயலி மூலம் தொடர்பில் இருங்கள்...'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2020
13:12

இப்போது, எல்லோருடைய தாரக மந்திரமும், 'விலகி இரு' என்பதாக இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், 'ஸ்டே டச்' (Stay Touch) என்ற ஒரு செயலி மூலம், ஒருவருடன் தொடர்பில் இருப்பது சுலபமாகிறது.

வியாபார அல்லது மரியாதை நிமித்தமாகவோ, ஒருவரை ஒருவர் பார்க்கும்போது கைகுலுக்குவது, விசிட்டிங் கார்டு கொடுப்பது போன்றவை சகஜம். ஆனால், 'கொரோனா' காலத்துக்கு பின், இதெல்லாம் தொடர்ந்து பரவலாக இருக்குமா என்பது சந்தேகமே. ஒருவரிடமிருந்து விசிட்டிங் கார்டு வாங்கியவுடன், உடனடியாக மொபைல் போனில் பதிவு செய்ய நினைப்பீர்கள். அந்த கஷ்டம் இப்போது இல்லை.

உங்களிடம், 'ஸ்டே டச்' செயலி இருக்குமானால் நீங்கள் சந்திக்கும் நபரிடமும் அதே செயலி இருக்குமானால், மொபைல் போன் வழியாகவே விசிட்டிங் கார்ட் விபரங்களை, மொபைல் போனுக்கு அனுப்பி விடலாம்.ஒருவருடைய விசிட்டிங் கார்ட் விபரங்களை பதியும்போது, அவர் யார் என்பதை ஞாபகம் வைத்து கொள்வதற்காக, அவரைப் பற்றிய விபரங்களையும் எழுதுவதற்கான இடமும், இந்த செயலியில், இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனியின் இணையதளம் www.staytouch.com பெண்களுக்காகவே ஒரு 'ஸ்டார்ட்அப்'இப்போது இல்லாவிட்டாலும், 'கொரோனா' காலத்துக்கு முன், உலகளவில் அதிகமாக விற்பனையானது, பெண்களின் தேவைகளுக்கான பொருட்கள் ஆகும். அதாவது மேக்கப், சரும பாதுகாப்பு, தலைமுடி பாதுகாப்பு, இயற்கை அழகு சாதனம், குழந்தைக்கு தேவையான பொருட்கள், வாசனை திரவியம் என்பதெல்லாம் இதில் அடங்கும்.

இதுபோன்ற பெண் களுக்கு தேவையான எல்லா பொருட்களும் ஒரே இடத்தில், கிடைத்தால் எப்படி இருக்கும். அதுவும் தள்ளுபடியுடன், வீட்டுக்கே நேரடியாக வரும்போது இன்னும் வசதியாக இருக்கும். அவ்வகையில், ஏறத்தாழ ஆயிரக்கணக்கான பொருட்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது, நைகா.காம் (nykaa.com). இவ்வளவு அழகு சாதன பொருட்கள் ஓரிடத்தில் கிடைப்பது இந்த இணையத்தில்தான் என கூறலாம்.

--சேதுராமன் சாத்தப்பன் --சந்தேகங்களுக்கு: sethu raman.sathappan@gmail.com, www.startupbuisnessnews.com. மொபைல் போன்: 98204 -51259.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஏப்ரல் 26,2020
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)