பதிவு செய்த நாள்
02 மே2020
23:11

புதுடில்லி:தொற்று
நோய் பரவல் காரணமாக, இந்திய ஓட்டல் துறை, நடப்பு ஆண்டில், 90
ஆயிரம் கோடி ரூபாய் வணிக இழப்பை சந்திக்கும் என, ஆய்வறிக்கை ஒன்று
தெரிவித்து
உள்ளது.
உலகளவிலான ஓட்டல் துறை ஆலோசனை
நிறுவனமான, எச்.வி.எஸ்., நிறுவனம், இந்தியாவில், ‘அனராக்’
நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு
உள்ளதாவது:
பயணக்
கட்டுப்பாடுகள், நாடு முடக்கப்பட்டது ஆகியவற்றின் காரணமாக,
முக்கியமான நகரங்களில் உள்ள ஓட்டல் அறைகளில் தங்குவோர்
எண்ணிக்கை, மிகவும் குறைந்துவிட்டது.
இந்நிலையில், ஒட்டுமொத்த
இந்திய ஓட்டல் துறை வருவாய், நடப்பு ஆண்டில், தோராயமாக, 90 ஆயிரம்
கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த
ஆண்டுடன் வருவாயை ஒப்பிடும்போது, 57 சதவீதம் குறைவாக இருக்கும்.
கடந்த
மார்ச் மாதத்தில், முக்கியமான, 13 இடங்களில், ஓட்டலில் தங்குவது,
53 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்த ஆண்டு முழுதும், 48
சதவீதம் அளவுக்கு சரிவு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|