பதிவு செய்த நாள்
02 மே2020
23:13

புதுடில்லி:’ஏப்ரல்
மாதம் மறக்க வேண்டிய மாதம்; மீண்டும் வணிகத்தை துவங்குவது குறித்து
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என, வாகன முகவர்கள்
கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல்
மாதத்தில், வாகன விற்பனை, கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலைக்கு
சென்று விட்டது. வாகன விற்பனை வரலாற்றில் இது ஒரு எதிர்பாராத
சம்பவம். இதற்கு முன் இப்படி ஒரு நிலையை வாகன துறையினர்
சந்தித்ததில்லை.கொரோனா நோய் தொற்று காரணமாக, நாடு முடக்கப்பட,
அத்துடன் சேர்ந்து, ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனையும் மொத்தமாக
முடங்கி போய்விட்டது.
மேலும், 17ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிலைமை சீராவதற்கான வாய்ப்புகளும் தள்ளிப் போயுள்ளது. இது குறித்து, இச்சங்கத்தின் தலைவர் அஷிஷ் ஹர்ஷராஜ் கேல் கூறியுள்ளதாவது:ஒட்டுமொத்த
வாகன துறையும் மறக்க வேண்டிய மாதம், ஏப்ரல் மாதமாகும். இது போன்ற
ஒரு நிலை, இனி எதிர்காலத்தில் வரக்கூடாது என்று வேண்டுகிறோம்.
ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் இந்த துறையில், மீண்டும் வணிகத்தை
துவக்க, அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.இந்த
தடை காலத்தில், தயாரிப்பாளர்களில் துவங்கி, முகவர்கள், பாகங்கள்
தயாரிப்பவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.ஒருவரை
ஒருவர் சார்ந்திருக்கும் நிலையில், தடை காலத்தில் யார்
பாதிப்புக்குள்ளானாலும், ஒட்டு மொத்த அமைப்புமே
பாதிப்புக்குள்ளாகி விடும்.
முதலில் சந்தையில் தேவை எந்த
அளவுக்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆனாலும்,
குறிப்பிடத்தக்க வகையில், தேவை குறைவாகவே இருக்கும் என்றே
எதிர்பார்க்கப்படுகிறது.தடை நீக்கத்துக்கு பின், தேவைகள் அதிகரிப்பதற்கு அரசின் ஆதரவு தேவை.ஜி.எஸ்.டி.,யை
குறைப்பது, வங்கி, வங்கி சாரா நிதியமைப்புகள் ஆகியவற்றின் வட்டியை
குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள், இத்துறை மீண்டும் துளிர்க்க
உதவிகரமாக இருக்கும்.
மேலும், நீண்ட காலமாக காத்திருக்கும் பழைய
வாகனங்களை, சாலை பயன்பாட்டில் இருந்து அகற்ற, ஊக்கச் சலுகைகள்
வழங்குவது குறித்த கொள்கை அறிவிப்பை வெளியிடுவதும்
உதவிகரமாக
இருக்கும்.மேலும், வாகன துறையை, அத்தியாவசிய பொருட்கள்
பட்டியலில் சேர்ப்பதன் மூலம், வங்கிகள் ஒதுக்கும் நிதி உதவியில்
ஒரு பகுதியை, இந்த துறைக்கு ஒதுக்க வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|