சிமென்ட், ‘எம் –- சாண்ட்’ விலை திடீர் உயர்வு சிமென்ட், ‘எம் –- சாண்ட்’ விலை திடீர் உயர்வு ...  ‘நெட்மெட்ஸ்’ நிறுவனத்தை வளைக்கும், ‘ரிலையன்ஸ்’ ‘நெட்மெட்ஸ்’ நிறுவனத்தை வளைக்கும், ‘ரிலையன்ஸ்’ ...
அதலபாதாளத்துக்கு பாய்ந்த சேவைகள் துறை வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2020
23:11

மும்பை:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில், வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

'ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா' நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், கடந்த ஏப்ரல் மாதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, ஏப்ரல் மாதத்தில் மிகப் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.


வீழ்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பால், அனைத்து வணிகங்களும் மூடப்பட்டு, ஸ்தம்பித்து விட்டன. மேலும், தேவையும் பெருமளவு குறைந்து விட்டது.இதையடுத்து, ஏப்ரல் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, 5.4 புள்ளிகளாக வீழ்ச்சியை கண்டுள்ளது.ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சி, கடந்த, 85 மாதங்களில் இல்லாத அளவு சரிந்து, 49.3 புள்ளிகளாகஇருந்தது. இப்போது அதிலிருந்தும் தலைகீழாக சரிந்து, 5.4 புள்ளிகள் என்ற அதலபாதாள நிலைக்கு சென்று விட்டது.


ஆட்குறைப்பு

இந்த சேவைகள் வளர்ச்சி குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.சேவைகள் துறையின் வளர்ச்சி குறியீடு குறித்த கணக்கீடு, கடந்த, 2005ல் துவங்கப்பட்டது.துவங்கிய, 15 ஆண்டுகளில் இதுவரை இப்படி ஒரு சரிவு காணப்படவில்லை.உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த கூட்டு, பி.எம்.ஐ., குறியீடு, ஏப்ரல் மாதத்தில், 7.2 புள்ளிகளாக வீழ்ந்துள்ளது. இதுவே, கடந்த மார்ச் மாதத்தில், 50.6 புள்ளிகளாக இருந்தது.

பன்னாட்டு விற்பனை முற்றாக சரிந்ததை அடுத்து, அதன் குறியீடு, 0.0 புள்ளிகளாக உள்ளது. வேலைவாய்ப்பை பொறுத்தவரை, வணிக தேவைகள் குறைந்ததை அடுத்து, சில சேவை நிறுவனங்கள், இரண்டாவது காலாண்டில், சிறிது ஆட்குறைப்பு முயற்சிகளை எடுத்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.பாதிப்புமற்றபடி, ஆய்வில் பங்கேற்ற, 90 சதவீத நிறுவனங்களில், ஊழியர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என, தெரிய வந்துள்ளது.


உற்பத்தி மற்றும் உள்ளீட்டு விலைகள், மார்ச் மாதத்தை விட அதிகம் சரிந்துள்ளது.மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, பணவாட்டத்தை பொறுத்தவரை, சேவைகள் துறையை விட, தயாரிப்பு துறையில் பாதிப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)