பதிவு செய்த நாள்
07 மே2020
23:03

சென்னை:தொழிற்சாலைகள் செயல்படுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டதும், தொழில் பூங்காக்களில், 294 நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை துவங்கி உள்ளன.
பணிகள் முடக்கம்
கொரோனா ஊரடங்கு நீடித்தாலும், தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கான,
வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது. அதனால், ‘சிப்காட்’ எனப்படும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில், இரண்டு நாளில், 200க்கும் அதிகமான பெரு நிறுவனங்கள், உற்பத்தியை துவங்கி உள்ளன.
இது குறித்து, சிப்காட் அதிகாரிகள் கூறியதாவது:இருங்காட்டுக்கோட்டை, செய்யாறு, பர்கூர், ராணிப்பேட்டை உட்பட, 18 சிப்காட் தொழில் பூங்காக்களில், 127 நிறுவனங்கள் செயல்பட்டன; ஊரடங்கால் பணிகள் முடங்கின.
அரசு அனுமதி
தற்போது, தொழிற்சாலைகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. இந்த பூங்காக்களில், 6ம் தேதி, 211 நிறுவனங்கள்; நேற்று, 83 நிறுவனங்கள் என, 294 நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கி உள்ளன. இதன் காரணமாக, 45 ஆயிரத்து, 867 தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பி உள்ளனர்.
இதில், அதிகபட்சமாக ஓசூர் தொழில்பூங்காவில் மட்டும், 106 நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கியதில், 8,796 பேர் பணிக்கு திரும்பி உள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள இருங்காட்டுக்கோட்டையில், 34 நிறுவனங்கள் தொழில்
துவங்கியதில், 9,140 ஊழியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|