பதிவு செய்த நாள்
07 மே2020
23:06

புதுடில்லி:ரத்தன் டாடா, ‘ஜெனிரிக் ஆதார்’ எனும், மருந்து சில்லரை விற்பனை நிறுவனத்தின், 50 சதவீத பங்குகளை வாங்கி உள்ளார்.
இந்த நிறுவனம், மும்பையைச் சேர்ந்த, 18 வயதாகும் அர்ஜுன் தேஷ் பாண்டே என்பவரால் துவங்கப்பட்டதாகும்.இவரது ஜெனிரிக் ஆதார் நிறுவனம், பிற, ‘ஆன்லைன்’ மருந்து விற்பனை நிறுவனங்களைப் போல அல்லாது, சந்தை விலையை விட மிகவும் குறைவான விலைக்கு மருந்துகளை விற்பனை செய்கிறது.தேஷ் பாண்டேவின் திட்டங்கள் குறித்து, மூன்று, நான்கு மாதங்களுக்கு முன், ரத்தன் டாடா கேட்டறிந்துள்ளார். அதையடுத்து, அந்த நிறுவனத்தின், 50 சதவீத பங்குகளை வாங்கி, பங்குதாரர் ஆகியுள்ளார்.விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, ரத்தன் டாடாவிடமிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\
ரத்தன் டாடாவின் இந்த முதலீடு, அவரது தனிப்பட்ட முதலீடு; டாடா குழுமத்துக்கும், இந்த முதலீட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நிறுவனத்தை தேஷ் பாண்டே துவக்கி விட்டார். இந்த நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருவாய், 6 கோடி ரூபாய்.இந்த நிறுவனம், ஜெனிரிக் மருந்துகளை, தயாரிப்பாளர்களிடம் நேரடியாக வாங்கி, சில்லரை விற்பனையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம், மொத்த விலை விற்பனையாளர்களின், 16 முதல், 20 சதவீத கமிஷன் மிச்சப்படுவதால், விலை குறைவாக வழங்க முடிகிறது.இன்னும் ஓராண்டில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், 1,000 சிறிய பிரான்சைஸ் மருந்து கடைகளை துவக்க, இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ரத்தன் டாடாவை பொறுத்தவரை, இது போன்ற, ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்வது புதிதான ஒன்றல்ல.இவர் இதற்கு முன், ‘ஓலா, பேடிஎம், ஸ்நாப்டீல், கியூர்பிட், அர்பன் லேடர், லென்ஸ்கார்ட், லிப்ரேட்’ என, பல நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|