பதிவு செய்த நாள்
11 மே2020
22:27

புதுடில்லி:இந்திய ரயில்வே, இன்றி லிருந்து படிப்படியாக பயணியர் ரயிலை இயக்க இருப்பதாகஅறிவித்ததை அடுத்து, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின் சந்தை மதிப்பு, நேற்று, ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.
இந்திய ரயில்வே, அதன் பயணியர் ரயில் சேவையை படிப்படியாக அதிகரிக்க
இருப்பதாகவும், முன்பதிவு, மாலை நான்கு மணி முதல் துவங்க இருப்பதாகவும் அறிவித்தது. இதனையடுத்து, பயணச்சீட்டு பதிவு சேவையை வழங்கும், ஐ.ஆர்.சி.டி. நிறுவன பங்குகள் விலை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில், நேற்று, இந்நிறுவனத்தின் பங்கு விலை, ’அப்பர் சர்க்யூட்’ எனும் அதன் அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச உயர்வான, 5 சதவீதத்தை அடைந்தது. இதனையடுத்து, இந்நிறுவன பங்கு விலை, மும்பை பங்குச் சந்தையில், 1,302.85 ரூபாயாக உயர்ந்தது.இதன் தொடர்ச்சியாக, இந்நிறுவன பங்கின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்
அளவுக்கு அதிகரித்தது.இந்நிறுவன பங்கு, கடந்த மார்ச், 31ம் தேதியிலிருந்து இதுவரை,
36 சதவீதம் அளவுக்குஅதிகரித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததை அடுத்து, ரயில்வே வருமானம் குறைந்தது. இதன் பாதிப்பு, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனப் பங்கு விற்பனைகளிலும், பிரதிபலித்து வந்தது.இந்நிலையில், மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து, சந்தை துவங்கியதுமே, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனப் பங்குகள் அதன், ‘அப்பர் சர்க்யூட்’ அளவான, 5 சதவீத உயர்வை எட்டிவிட்டது.
தேசிய பங்குச் சந்தையில், இந்நிறுவன பங்கு விலை, 1,303.55 ரூபாயாக உயர்ந்தது. இதன் முந்தைய வர்த்தக நாளின் இறுதி விலை ,1,241.50 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 25,857 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|