பதிவு செய்த நாள்
11 மே2020
22:32

புதுடில்லி:நாட்டின்
எரிபொருள் தேவை,கடந்த ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட, 46 சதவீதம்
அளவுக்கு சரிந்துள்ளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தேவை
சரிந்துள்ளதால் இந்நிலை.
நாட்டின் எரிபொருள் தேவை, ஏப்ரல்
மாதத்தில், 45.8 சதவீதம் சரிவை கண்டு, 99.22 லட்சம் டன் என்ற அளவில்
உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1.83 கோடி டன் ஆக இருந்தது
குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, பெட்ரோலிய அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மதிப்பீட்டு
மாதத்தில், பெட்ரோல் விற்பனை, 60.43 சதவீதமாக குறைந்து, 9.73 லட்சம்
டன் ஆக இருந்தது. இம்மாதத்தின் முதல் பாதியில், 64 சதவீதமாக
குறைந்த நிலையில், பிற்பாதியில் சற்று அதிகரித்துள்ளது.
டீசல்
விற்பனை, ஏப்ரல் முதல் பாதியில், 61 சதவீதம் அளவுக்கு சரிந்து, பின்
சற்று ஏற்றம் கண்டு, 55.6 சதவீதமாக உள்ளது. 32.50 லட்சம் டன் டீசல்,
ஏப்ரலில் விற்பனை ஆகிஉள்ளது.
விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை, 91.3 சதவீதம் சரிந்துள்ளது.மாறாக,
மானிய விலையிலான சமையல் எரிவாயு விற்பனை, 12.2 சதவீதம் அளவுக்கு
அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|