பதிவு செய்த நாள்
11 மே2020
22:44

புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய மூலதன சந்தைகளிலிருந்து, கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து முதலீடுகளை திரும்ப பெற்றுக்கொண்டிருந்தனர். இந்நிலையில், நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, இம்மாதத்தின் முதல் வாரத்தில், 15 ஆயிரத்து, 958 கோடி ரூபாயை முதலீடு செய்துஉள்ளனர்.
கடந்த,
18ம் தேதி வரையிலான காலத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், 18
ஆயிரத்து 637 கோடி ரூபாயை, பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.
மேலும், 2,679 கோடி ரூபாயை, கடன் சார்ந்த திட்டங்களிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். கடந்த
மார்ச் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் சாதனை அளவாக, 1.1
லட்சம் கோடி ரூபாயை திரும்ப பெற்றனர். ஏப்ரல் மாதத்தில், 15
ஆயிரத்து, 403 கோடி ரூபாயை, உள்ளூர் நிதிச் சந்தையிலிருந்து திரும்ப பெற்றனர்.
கொரோனா
வைரஸ் தாக்குதல் காரணமாக, உலகளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்படவும், அது இந்திய நிதி சந்தைகளிலும் பிரதிபலித்தது.
இதையடுத்து, நிச்சயமற்ற சூழலில், அன்னிய முதலீட்டாளர்கள்
பெருமளவிலான முதலீட்டை திரும்ப பெற்றனர். ஆனால், தற்போது அவர்கள்
அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|