பதிவு செய்த நாள்
11 மே2020
22:47

புதுடில்லி:முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வரும், 14ம் தேதியன்று, அதன் உரிமை பங்குகளை வாங்க, யார் யாருக்கு தகுதி இருக்கிறது என்பதை இறுதி செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை, நேற்று, மும்பை பங்குச் சந்தையில், 1,615 ரூபாய் வரை அதிகரித்து, இறுதியில், 1,575-------- ரூபாயாக நிலை பெற்றது.ரிலையன்ஸ்,
53 ஆயிரத்து, 125 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமைப் பங்குகளை வெளியிட இருப்பதாக
அறிவித்துள்ளது. இதன்படி, இந்நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு, 15 பங்குகளுக்கு ஒரு பங்கு வீதம் வழங்க இருக்கிறது.
மேலும், ஏப்ரல், 30ம் தேதி விலையிலிருந்து, 14 சதவீதம் தள்ளுபடி செய்து வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு பங்கின் விலை, 1,257 ரூபாய் ஆகிறது.
நேற்றைய நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, 1,575 ரூபாயாக இருந்தபோதிலும், 1,257 ரூபாய்கே, பங்குதாரர்களுக்கு வழங்கப்படும்.உரிமை பங்கு வெளியீடு எப்போது துவங்கி, எப்போது முடியும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என, நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|