பதிவு செய்த நாள்
12 மே2020
21:52

புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில், 16.7 சதவீதம் குறைந்துள்ளது. நாடு முடக்கப்பட்டதை அடுத்து, இம்மாதத்தில், சுரங்கம், தயாரிப்பு துறை, மின்சார துறை ஆகியவற்றில் சரிவு ஏற்பட்டதை அடுத்து, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 16.7 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து, நாடு முடக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மார்ச் மாதத்தின் இந்த ஒரு வார முடக்கத்திலேயே, 16.7 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுவிட்டது.கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 2.7 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், தயாரிப்பு துறை வளர்ச்சி, 3.1 சதவீதம் அதிகரித்திருந்தது. நடப்பு ஆண்டு மார்ச்சில், தயாரிப்பு துறை வளர்ச்சி, 20.6 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது.மின்சார உற்பத்தியும் சரிவு கண்டுள்ளது. மதிப்பீட்டு காலத்தில், 6.8 சதவீதம் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் வளர்ச்சி, 2.2 சதவீதமாக இருந்தது.சுரங்கத்துறையை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில், வளர்ச்சி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல், 0.8 சதவீதமாக உள்ளது.
தொழில் துறை உற்பத்தி, கடந்த நிதியாண்டில், 0.7 சதவீதம் சரிந்திருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நிதியாண்டான, 2018 – 19ல், 3.8 சதவீதமாக வளர்ச்சி அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா பரவல் காரணமாக, நாடு முடக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் மாதத்தில் இன்னும் அதிகளவில் வளர்ச்சியில் சரிவு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|