பதிவு செய்த நாள்
12 மே2020
23:12

புதுடில்லி:ஒட்டு மொத்த வங்கிகளின் வாராக் கடன்களை நிர்வகிக்கும் வகையில், தனியாக, ‘பேடு பேங்க்’ எனும், வாராக் கடன் வங்கி ஒன்று விரைவில் துவங்கப்பட உள்ளது.
இது குறித்து, வங்கி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வங்கிகளின், 60 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனை நிர்வகிக்க, தனியாக, ஒரு வாராக் கடன் வங்கி துவங்கப்பட இருக்கிறது. மேலும், அரசு இதில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது.இது கிட்டத்தட்ட அதன் மூலதனத்தில், 50 சதவீதம் அளவுக்கு இருக்கும்.
இதையடுத்து, வங்கிகள் அவற்றின், 60 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனை, இந்த சொத்து புனரமைப்பு நிறுவனத்துக்கு மாற்றும் வாய்ப்பிருக்கிறது.இந்நிறுவனம், செயல்படாத சொத்துக்களை நிர்வகிப்பது மற்றும் மதிப்பை அதிகரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
இதன் மூலம், வங்கிகளின் அழுத்தம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த வாராக் கடன் வங்கி, பழைய மற்றும் புதிய வாராக் கடன்களை எடுத்துக் கொள்ளும்.கொரோனா தாக்குதல் காரணமாக, வாராக் கடன் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஏற்கனவே ஆலோசனையில் இருக்கும் வாராக் கடன் வங்கி, விரைவில் துவங்கப்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|